'முட்டை, பால் பொருட்களாலே நகர்ப்புற பணவீக்கம் அதிகரிப்பு’- ரிசர்வ் வங்கி தலைவர்

கறி மற்றும் மீன் விலை ஏற்றம் 8.51 சதவிகிதமும் பாக்கெட் உணவுகள் 2.35 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

'முட்டை, பால் பொருட்களாலே நகர்ப்புற பணவீக்கம் அதிகரிப்பு’- ரிசர்வ் வங்கி தலைவர்
ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்ததாஸ்
  • News18
  • Last Updated: September 16, 2019, 9:10 PM IST
  • Share this:
முட்டை மற்றும் பால் பொருட்களாலே நகர்ப்புறங்களில் பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது என ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி டிவி 18 தொலைக்காட்சிக்கு ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “முட்டை மற்றும் பால் பொருட்கள் விலை அதிகரிப்பதாலே நகர்ப்புறங்களில் பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் மக்கள் பால் மற்றும் முட்டைகளை விலைகொடுத்து வாங்குவதில்லை. இதனாலே கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது” என்றார்.

இந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் பணவீக்கத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் 3.15 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் அதிகரித்து 3.21 சதவிகிதமாக உள்ளது. இதேபோல், ஆகஸ்ட் மாத பணவீக்கம் நகர்ப்புறங்களில் 4.49 சதவிகிதமாகவும் கிராமப்புறங்களில் 2.18 சதவிகிதமாகவும் உள்ளது.


உணவுப் பொருட்களைப் பொறுத்த வரையில் காய்கறி விலை 6.90 சதவிகிதமும் பால் மற்றும் பால் பொருட்கள் 1.40 சதவிகிதமும் மசாலா 2.37 சதவிகிதமும் பருப்பு 6.94 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கறி மற்றும் மீன் விலை ஏற்றம் 8.51 சதவிகிதமும் பாக்கெட் உணவுகள் 2.35 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

மேலும் பார்க்க: கடும் வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் - சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

ஆக்கிரமிப்பை அகற்றாமல் பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணி..
First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்