ஹோம் /நியூஸ் /வணிகம் /

டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

யுபிஐ

யுபிஐ

வேறொரு யுபிஐ கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெற முடியும்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  UPI எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகிவிட்டன.. சமீப காலங்களில் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் முறையில் பலவித புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி அதனை இன்னும் மிகவும் எளிமையாக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த கொரோனா பெருந்தொற்றின் விளைவால் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுவது பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

  டிஜிட்டல் வாலட்டுகள், NEFT/RTGS, யுபிஐ, பேடிஎம், கூகுள் பே, பிம் ஆப் மற்றும் பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன. இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு எளிமையாக மாறினாலும், அதே அளவிற்கு சில பிரச்சனைகளும் உருவாகின்றன. முக்கியமாக சமீப காலங்களில் யூபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகின்றது.

  ஏற்கெனவே கட்டிய வீட்டை வாங்கப் போறீங்களா? ஏமாறாமல் இருக்க இதையெல்லாம் செக் பண்ணுங்க!

  இதற்கு முக்கிய காரணம் இந்த யுபிஐ முறையில் செய்யப்படும் பண பரிவர்த்தனையின் பொது நமக்கே தெரியாமல் தவறான யுபிஐ கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெறுவது என்பது இயலாத காரியம். எனவே ஒரு வேளை நீங்கள் தவறுதலாக வேறொரு யுபிஐ கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை எந்த வழிகளில் திரும்ப பெற முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

  யுபிஐ செயலியின் உதவிக் குழுவை அழைத்து பிரச்சனையை கூறலாம்:

  நீங்கள் எந்த செயலி மூலம் பணத்தை அனுப்பினீர்களோ அந்த செயலியின் உதவி குழுவை தொடர்பு கொண்டு நடந்த தவறை தெரிவிக்க வேண்டும். அனைத்து செயலிகளும் இது போன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்காக தங்களுக்கென தனி வாடிக்கையாளர் சேவை குழுவை நிர்வாகித்து வருகின்றனர்.

  BHIM இன் உதவி என்னை அழைக்கலாம்:

  இரண்டாவதாக BHIM எனப்படும் பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி என்ற செயலியின் இலவச வாடிக்கையாளர் உதவி எண்ணான 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம். இது பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட எண் ஆகும். அந்த எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டதின் முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  ஆனால் இதைப் பற்றி பிம் செயலியிலேயே ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பகுதியில் “நான் பணத்தை தவறுதலாக வேறொரு கணக்கிற்கு அனுப்பி விட்டேன் என்னால் அந்த பணத்தை திரும்ப எடுக்க முடியுமா” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

  வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

  அதில் “இல்லை” என்ற பதிலே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனையை மறுபடியும் ரிவர்ஸ் செய்வது என்பது இயலாத ஒன்று எனவும் இந்த NPCI என்னும் தளம் பணத்தை பரிவர்த்தனை செய்ய உதவும் ஒரு தளமே தவிர, வாடிக்கையாளர்களின் அனுமதியில்லாமல் ஒரு கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதோ அல்லது மற்றொரு கணத்திற்கு பணத்தை அனுப்புவதோ கண்டிப்பாக முடியாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய பிறகு மறுமுனையில் அந்த கணக்கிற்கு உரியவேரே விருப்பப்பட்டாலே தவிர, அந்த பணத்தை திரும்ப எடுப்பது என்பது முடியாத காரியம் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கணக்கு வைத்துள்ள வங்கியை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்:

  பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்து கொண்ட மறுகணமே, அந்த யுபிஐ ஐடி மற்றும் அனுப்பிய பணத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நீங்கள் எந்த கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினீர்களோ அந்த வங்கியின் ஈமெயில் அல்லது தொலைபேசி வழியாக இந்த தகவல்களை அனுப்பி அவர்களிடம் உதவி கேட்கலாம். முடிந்தால் அந்த வங்கியின் மேலாளரை சந்தித்தும் உதவி கேட்கலாம். இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரே இடம் வங்கியாக மட்டுமே இருக்க முடியும். முடிந்த அளவு விரைவாக இதை நீங்கள் செய்ய வேண்டும்.

  இதில் இன்னொரு பிரச்சனையும் ஏற்படுவது உண்டு. சில நேரங்களில் தவறான யுபிஐ கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது நீங்கள் தவறாக பதிவிட்ட யுபிஐ ஐடி செயல்பாட்டில் இல்லையென்றால், உங்களது பணம் உடனடியாக உங்களது கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். எனவே உங்கள் பணம் உடனடியாக திரும்பவில்லை எனில் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த யுபிஐ கணக்கு வேறு ஒருவருடைய இது என்றும் அந்த பணம் அவர்களுக்கு சென்றுவிட்டது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, RBI, UPI