Home /News /business /

ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பரிவர்த்தனை - மற்றொரு மைல்கல்லை எட்டியது UPI

ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பரிவர்த்தனை - மற்றொரு மைல்கல்லை எட்டியது UPI

UPI

UPI

UPI Payment | வெவ்வேறு வங்கிக் கணக்குகளை அணுகுவதற்கு ஒரே செல்போன் செயலியை பயன்படுத்தும் போது, ​​24×7 மற்றும் 365 நாட்களிலும் மொபைல் சாதனத்தின் மூலம் உடனடி பணப் பரிமாற்றத்தை UPI மூலம் செய்யலாம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா லாக்டவுன் போன்ற காரணங்களால் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காகவே UPI எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்ற வசதியை இந்தியா அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இது இந்திய தேசிய கொடுப்பனவு ஆணையத்தால் (NPCI) உருவாக்கப்பட்டதாகும்.

UPI என்றால் என்ன?

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் கீழ் இணைக்கும் அமைப்பாகும், பல வங்கி பரிவர்த்தனைகள், தடையற்ற நிதி ரூட்டிங் & வணிகர்களுக்கு பணம் செலுத்துவது ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது.

வெவ்வேறு வங்கிக் கணக்குகளை அணுகுவதற்கு ஒரே செல்போன் செயலியை பயன்படுத்தும் போது, ​​24×7 மற்றும் 365 நாட்களிலும் மொபைல் சாதனத்தின் மூலம் உடனடி பணப் பரிமாற்றத்தை UPI மூலம் செய்யலாம்.

ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கான பரிவர்த்தனை:

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் இந்த யூபிஐ பரிவர்த்தனை தொடர்ந்து பல சாதனைகளையும் படைத்து வருகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்பிசிஐ) சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, முதன் முறையாக மே மாதத்தில் ரூ. 10-லட்சம் கோடியைத் தாண்டி யூபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



2016 இல் தொடங்கப்பட்டதில் இருந்து, UPI பரிவர்த்தனை முறை பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிய போது மேலும் தூண்டப்பட்டு, தற்போது அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. மார்ச் 2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த போது, யூபிஐ மூலமாக ரூ.2.06 லட்சம் கோடி மதிப்பிலான 124 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

Also Read : PM cares : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை!

ரியல் டைம் பரிவர்த்தனைகள் ஏப்ரல் மாதத்தில் 558 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மே மாதம் மட்டும் 595 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய தேசிய கொடுப்பனவு ஆணையத்தின் தரவுகளின் படி, 2022 நிதியாண்டில் UPI பரிவர்த்தனைகள் $1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது. தரவுகளின்படி, ஆண்டுக்கான UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 83.45 டிரில்லியன் வரை சேர்ந்தது, இது தோராயமாக $1 டிரில்லியன் ஆகும். NPCI இப்போது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் $1 பில்லியன் மதிப்புள்ள தினசரி UPI பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டுள்ளது.

Also Read : டிஜிட்டல் முறையில் கடன் வாங்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 9ம் தேதி அன்று, UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ஸ்மார்ட்போன் அல்லது இணைய சேவை தேவையில்லை என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட UPI123Pay அமைப்பு சோதனை முயற்சியில் உள்ள நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு ஆணைய UPILiteஐ ஆஃப்லைன் பயன்முறையில் பயன்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது. இதனால் யூபிஐ பரிவர்த்தனைகள் பெரு நகரங்களைக் கடந்து கிராமப்புறங்களிலும் வேரூன்ற ஆரம்பித்துள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Bill payment issue, India, UPI

அடுத்த செய்தி