முகப்பு /செய்தி /வணிகம் / இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் யூபிஐ பேமெண்ட் செய்வது சாத்தியமா? - முக்கிய தகவல் அறிவோம்!

இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் யூபிஐ பேமெண்ட் செய்வது சாத்தியமா? - முக்கிய தகவல் அறிவோம்!

பேமெண்ட்ஸ் ஆப்ஸ்

பேமெண்ட்ஸ் ஆப்ஸ்

UPI Payment Without Internet | பணம் பெறுவதற்கும், பணம் அனுப்புவதற்கு, யூபிஐ பின் நம்பர் மாற்றம் செய்வதற்கு மற்றும் உங்கள் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு என்பதை சரி பார்ப்பதற்கு என பல வசதிகளை இதில் இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்றைய உலகம் டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டது. நாளுக்கு, நாள் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. கூகுள் பே, பேடிஎம், ஃபோன்பே அல்லது வேறு ஏதேனும் ஒரு யூபிஐ பேமெண்ட் சேவை மூலமாக நீங்கள் பணம் அனுப்புகையில், அந்த பரிவர்த்தனை பாதியில் தடைபட்டு நிற்பதை நீங்கள் எதிர்கொண்டு இருப்பீர்கள்.

அப்படியானால் இனி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள *99# என்ற யூஎஸ்எஸ்டி எண்-ஐ உங்கள் ஃபோனில் டயல் செய்யுங்கள். இது உங்களுக்கு இன்டர்நெட் இல்லாமலேயே மொபைல் பேங்கிங் சேவை வசதி கொடுக்கும். பணம் பெறுவதற்கும், பணம் அனுப்புவதற்கு, யூபிஐ பின் நம்பர் மாற்றம் செய்வதற்கு மற்றும் உங்கள் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு என்பதை சரி பார்ப்பதற்கு என பல வசதிகளை இதில் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பெற்றுக் கொள்ளலாம்.

எந்தெந்த வங்கிகளில் இந்த சேவை கிடைக்கிறது

நாட்டில் உள்ள அனைவருக்கும் *99# சேவை மூலமாக வங்கிச் சேவை அளிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள 83 வங்கிகள் இந்த சேவையை 4 டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த சேவையை நீங்கள் ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் பெற்றுக் கொள்ளலாம். இனி, ஆப்லைன் யூபிஐ பேமெண்ட்களை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

யூபிஐ ஆப்லைன் பேமெண்ட் முறையை அமைக்க வேண்டும்

உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இருந்து *99# என டயல் செய்யவும். அதே சமயம், வங்கியில் இணைக்கப்பட்ட ஃபோன் நம்பர் மூலமாகவே இதை செய்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லாவிட்டால் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த முடியாது.

இப்போது உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து, உங்கள் வங்கி பெயரை குறிப்பிடவும். உங்கள் நம்பருடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்குகள் இங்கு காண்பிக்கப்படும். சரியான ஒன்றை தேர்வு செய்யவும்.

உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 எண்களை உள்ளிடவும். இதனுடன் எக்ஸ்பியரி தேதியையும் குறிப்பிடவும். இதைச் செய்து முடித்த பிறகு இன்டர்நெட் கனெக்‌ஷன் இன்றி நீங்கள் யூபிஐ பேமெண்ட் செய்து கொள்ள முடியும்.

ஆப்லைன் யூபிஐ பேமெண்ட்ஸ்

* உங்கள் ஃபோனில் *99# டயல் செய்யவும். இதில் பணம் அனுப்புவதற்கு எண் 1-ஐ அழுத்தவும்.

* உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து, நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் தொலைபேசி எண் / யூபிஐ அடி / வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.

* இதற்குப் பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் தொகை மற்றும் பின் நம்பர் ஆகியவற்றை எண்டர் செய்யவும்.

* இதைச் செய்தவுடன், உங்கள் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடையும். பரிவர்த்தனை ஒன்றுக்கு 0.50 பைசா அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போதைய சூழலில், இந்த சேவை மூலமாக ரூ.5,000 வரையில் பணம் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பரும் இதே வழிமுறையை பின்பற்றி உங்களுக்கு பணம் அனுப்ப முடியும்.

First published:

Tags: Online Transaction, UPI