Home /News /business /

டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்.. பொதுமக்கள் கவனமாய் இருங்கள்!

டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்.. பொதுமக்கள் கவனமாய் இருங்கள்!

தீப்பெட்டி

தீப்பெட்டி

டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அனைத்து EMI கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கும் வரியுடன் ரூ. 99 செயலாக்கக் கட்டணம் விதிக்கப்படும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் போராடி வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் பொருட்களுக்கான விலைவாசி உயர்வை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதாவது வருகிற டிசம்பர் மாதம் முதல், தீப்பெட்டியின் விலை தற்போதைய ரூ 1ல் இருந்து ரூ 2 ஆக உயரப்போகிறது. சுமார் 14 வருட இடைவெளிக்குப் பிறகு தீப்பெட்டியின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

    தீப்பெட்டியின் விலை 100% உயர்த்தப்பட்டதன் பின்னணியில் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவை தான் முக்கிய காரணம் என தொழில்துறை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், விலை அதிகரிப்புக்கு ஏற்ப ஒரு பெட்டியில் தீக்குச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிப்பட்டுள்ளது. அதாவது ₹2 தீப்பெட்டியில் 50 குச்சிகளும், ₹1 பெட்டியில் 36 குச்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வு வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் சமீபத்தில் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம் கூறியதாவது, " உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் தீப்பெட்டியின் அதிகபட்ச சில்லறை விலையை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    ஒரு கிலோ சிவப்பு பாஸ்பரஸ் ₹410ல் இருந்து ₹850 ஆகவும், மெழுகு ₹72ல் இருந்து ₹85 ஆகவும், பொட்டாசியம் குளோரேட் ₹68ல் இருந்து ₹80 ஆகவும், ஸ்பிண்ட்ஸ் (குச்சிகள்) ₹42ல் இருந்து ₹48 ஆகவும், வெளி பெட்டி ₹42ல் இருந்து ₹55 ஆகவும், உள் பெட்டி ₹38ல் இருந்து ₹48 ஆக உள்ளது. இதுபோல் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே விலை உயர்த்தப்படுவதாக" சேதுரத்தினம் கூறியுள்ளார்.

    இதேபோல, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள், அனைத்து சமமான மாதாந்திர தவணை (EMI) வாங்குதல்களுக்கும் குறிப்பிடத்தக்க கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த கட்டண விதிமுறை 2021ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அனைத்து EMI கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கும் வரியுடன் ரூ. 99 செயலாக்கக் கட்டணம் விதிக்கப்படும் என SBI தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

    டிசம்பர் மாதம் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!

    SBI கடன் அட்டையை பயன்படுத்தி வணிக விற்பனை நிலையங்கள், இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

    SBI கிரெடிட் கார்டு தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாவது, “அன்புள்ள அட்டைதாரரே, 2021 டிசம்பர் 1ம் தேதி முதல், வணிகர் அவுட்லெட்/இணையதளம்/ஆப்பில் செய்யப்படும் அனைத்து வணிகர் EMI பரிவர்த்தனைகளுக்கும் செயலாக்கக் கட்டணம் ரூ.99 + பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்படும். உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். Merchant EMI செயலாக்கக் கட்டணம் பற்றி மேலும் அறிய இணையதளத்தை பார்வையிடவும்” என்று குறிப்பிட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank

    அடுத்த செய்தி