ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு உட்பிரிவுகள் நீக்கம்! புதிய குற்றச்சாட்டு

தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், முன் எப்போதும் நடைபெறாத வகையில், ஊழல் தடுப்பு உட்பிரிவுகளை நீக்கியதாக கூறப்பட்டுள்ளது.

Tamilarasu J | news18
Updated: February 11, 2019, 12:08 PM IST
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு உட்பிரிவுகள் நீக்கம்! புதிய குற்றச்சாட்டு
ரஃபேல்
Tamilarasu J | news18
Updated: February 11, 2019, 12:08 PM IST
ரஃபேல் விவகாரத்தில் ஊழல் தடுப்பு உட்பிரிவுகளை நீக்கியதாக மத்திய அரசு மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், முன் எப்போதும் நடைபெறாத வகையில், ஊழல் தடுப்பு உட்பிரிவுகளை நீக்கியதாக கூறப்பட்டுள்ளது.

காப்போலை மூலம் மட்டுமே பணப்பறிமாற்றம் நடைபெற வேண்டும் என்ற பொருளாதார நிபுணர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில தினங்களுக்கு முன் இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம் பெறவில்லை என்று தி ஹிந்து நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு தளவாடங்களை வாங்கும் போது மேற்கொள்ளப்படும், தவறான செல்வாக்கு, இடைத்தரகர்களுக்கு கமிஷன் கொடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, அதிகாரம் மிக்க அரசியல் தலையீடுகளால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், IGA எனப்படும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் 8 மாற்றங்கள் செய்ததாக கூறப்பட்டுள்ளது. 2016- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...