பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஓசி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்

பொதுப் பிரிவில்  ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்  இட ஒதுக்கீடு பெற தகுதி உடையவர் ஆவர்.

Web Desk | news18
Updated: January 7, 2019, 5:19 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஓசி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் மோடி.
Web Desk | news18
Updated: January 7, 2019, 5:19 PM IST
பொதுப் பிரிவில் (OC) உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த இட ஒதுக்கீடானது, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழை பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் .

அதன்படி, பொதுப் பிரிவில்  ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்  தகுதி உடையவர் ஆவர்.

இந்த இட ஒதுக்கீட்டை அளிக்க இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 15 மற்றும் 16-ல் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

2019 தேர்தலின் போது பொதுப் பிரிவினர்களின் வாக்குகளை கவரவே மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த சட்டத்தை கொண்டு வருகிறது என விமர்சனங்களும் எழுகின்றன.

மேலும் பார்க்க: தமிழகத்தில் ரூ.140 கோடி மதிப்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்
First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...