Home /News /business /

Union Budget 2022: ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள்; தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிமீ தூரத்துக்கு விரிவு படுத்தப்படும்

Union Budget 2022: ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள்; தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிமீ தூரத்துக்கு விரிவு படுத்தப்படும்

மத்திய பட்ஜெட் 2022-23, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2022-23, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022-23ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். 2022-23ம் ஆண்டுகளில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 60,000 வீடுகள் கிராமங்கள் நகர்ப்புறங்களில் கட்டித்தரப்படும்.

    2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அதில் முக்கிய அம்சமாக உள்கட்டமைப்பு நிதிஒதுக்கீடு மற்றும் வளர்ச்சி குறித்த அறிவிப்பை மேற்கொண்டார்.

    அதன் சில அம்சங்கள் வருமாறு:

    போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தில் 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5%லிருந்து 10% ஆகக்குறைப்பு.

    மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம்
    உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் திட்டம் கொண்டு வரப்படும்.

    கதி சக்தி திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 100 புதிய சரக்கு முனையங்கள் அமைக்க திட்டம்

    ரூ. 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    நீர்ப்பாசன இணைப்பு திட்டம் ரூ.46, 605 கொடி செலவில் நிறைவேற்றப்படும்.

    டிரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம். நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்

    மல்டி-மாடல் சரக்குப் போக்குவரத்து பூங்கா உருவாக்க 2022-23ம் ஆண்டில் 4 நகரங்களில் புதிய ஒப்புதல் வழங்கப்படும்

    பாஸ்போர்ட்களில் சிப் பொருத்தப்பட்டு இ-பாஸ்போர்ட் வழங்கப்படும்.

    உலகத்தரம் வாய்ந்த கல்விக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இது வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும். இது நெட்வொர்க் மையங்கள் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. திறன் மேம்பாட்டுக்காக புதிய இணையதளம் தொடங்கப்படும்.

    கடந்த ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் கல்வியை இழந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளிடையே கல்வி அளிப்தற்காக புதிய டிவி சேனல்கள் உருவாக்கப்படும்.

    ஒரு வகுப்பு, ஒரு டிவி சேனல் என்ற திட்டம் 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும். இது அனைத்து பிராந்திய மொழிகளிலும் கல்வியை வழங்க மாநிலங்களுக்கு உதவும்.

    2022-23ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். 2022-23ம் ஆண்டுகளில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 60,000 வீடுகள் கிராமங்கள் நகர்ப்புறங்களில் கட்டித்தரப்படும்.

    3.80 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

    வங்கிச் சேவைக்குள் 1.50 லட்சம் தபால் நிலையங்கள் கொண்டு வரப்படும். இணையதள வங்கிச் சேவை, ஏடிஎம் வசதி, பணப்பரிமாற்றம் செய்யும் வசதி செய்யப்படும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Union Budget 2022

    அடுத்த செய்தி