நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதிகள் அறிவிப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடைசி பட்ஜெட் கூட்டம் இது என்பதால் அரசியல் ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

news18
Updated: January 20, 2019, 3:57 PM IST
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதிகள் அறிவிப்பு!
நோக்கம்: இந்தியா போன்ற மிகப் பெரிய பொருளாதாரத்தைப் படைத்த நாடுகளில் கலாச்சாரம் சாதி, மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். முன்பு நடந்தது மற்றும் வரும் நாட்களில் என்ன ஆகும் என்பதைப் பொருத்துப் பட்ஜெட்டை அறிக்கையைத் தயார் செய்யும்.
news18
Updated: January 20, 2019, 3:57 PM IST
2019 ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்று அரசு தரப்பிலிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இன்று நாடாளுமன்றத்தில் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டியின் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடைசி பட்ஜெட் கூட்டம் இது என்பதாலும் அரசியல் ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

2019 பொதுத் தேர்தலில் பாஜக எப்படியும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் முழுமையான பட்ஜெட்டையே தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவியதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இத்தகவல் உள்ளது.

மேலும் படிக்க: ராகுல், சோனியா ரூ.100 கோடி வரி ஏய்ப்பு?
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...