Budget 2019: தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு ரூ.485 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம் - தஞ்சாவூர் வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையாக்குவதற்கான அறிவிப்பு இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்

Web Desk
Updated: February 2, 2019, 12:22 PM IST
Budget 2019: தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு ரூ.485 கோடி ஒதுக்கீடு
கோப்புப்படம்
Web Desk
Updated: February 2, 2019, 12:22 PM IST
தமிழகத்தில் மூன்று ரயில் வழித்தடங்களை இரட்டை வழிப்பாதையாக மாற்ற 2018-19 இடைக்கால பட்ஜெட்டில் 485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-19ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் ரயில்வே புது திட்டங்கள் பற்றிய குறிப்பேடும் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் தமிழகத்துக்கான பல அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

முக்கியமாக மூன்று தென் மாவட்டங்களில் ரயில் வழித்தடங்களை இரட்டை வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்கபட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள வரிச்சலுகை என்ன?

160 கிலோ மீட்டர் நீளமுள்ள மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையாக்க 169 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல், 102 கிலோ மீட்டர் நீளமுள்ள வாஞ்சி மணியாச்சி - நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையாக்க 183 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Loading...
சுமார் 87 கிலோ மீட்டர் தூரமுள்ள கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையாக்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில்இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும் என பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க, விழுப்புரம் - தஞ்சாவூர் வழித்தடத்தை இரட்டை வழிப்பாதையாக்குவதற்கான அறிவிப்பு இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...