பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வருமான வரியில் திருத்தத்தை மேற்கொண்டார். தற்போதைய வருமான வரி விகிதம் 2014 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் அனைத்துமே நடுத்தர வகுப்பு மக்களின் தேவைகள் மற்றும் நன்மைகளை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை செலவுகள் கூட கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இந்நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் கூடுதலாக வரிச்சலுகைகள் மற்றும் நன்மைகளை எதிர்பார்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பது பற்றி நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது நடுத்தர வகுப்பு மக்கள், ஓய்வூதியக்காரர்கள், சம்பள வருமானத்தை நம்பி இருப்பவர்கள், தங்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்குமா என்று பெரிதும் எதிர்பார்ப்பது உண்டு. அது மட்டுமல்லாமல் வருமான வரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓரளவுக்காவது ஒரு சில மாற்றங்கள் ஆவது மேற்கொள்ளப்படும். இதில் ஓய்வூதியம் வாங்குபவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வருமான வரியில் மொத்த வருமானத்தில் விலக்கு அளிக்கப்படும் ஸ்டாண்டர்டு டிடக்ஷன் தொகை அதிகரிக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது வரை ஸ்டாண்டர்டு டிடக்ஷன் தொகை ரூ.50,000 என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக, வருமான வரி சட்டம், பிரிவு 80C இன் கீழ், அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாய் விலக்கு பெறலாம். ஆனால், இந்த ஆண்டு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில், நிதி அமைச்சர் அதிகபட்ச விலக்கு தொகையை 2 லட்ச ரூபாயாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விலக்குகளின் வரம்புகளை மாற்றுவது மட்டுமல்லாமல், வரி விகிதங்களை குறைக்க வேண்டும் அல்லது முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டாம். ஆனால், இந்த வரம்பும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வரி விகித அட்டவணை முழுவதுமாக மாறலாம் மற்றும் வருமான வரி விலக்குத் தொகையும் அதிகரிக்கும். அனைத்து தரப்பினருக்கும் இது பெரிய அளவில் பலன் அளிக்கக் கூடும்.
ஒரு பக்கம் பட்ஜெட் தாக்கலில் வரி சார்ந்த விலக்குகளின் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கையில், புதிய வரி விகித அட்டவணை, பழைய வரி விகித அட்டவணை சார்ந்த குழப்பங்களும் நிலவி வருகிறது. நடப்பாண்டு வரி விகிதத்தின் படி, ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் (சம்பளம்) இருப்பவர்களுக்கு புதிய வரி விகிதம் பொருத்தமாக இருக்கும். ஆனால், விலக்குகள் எதையும் கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Union Budget 2023