முகப்பு /செய்தி /வணிகம் / 2023 மத்திய பட்ஜெட் - நிதியமைச்சர் உரையின் 10 முக்கிய அம்சங்கள் இதோ!

2023 மத்திய பட்ஜெட் - நிதியமைச்சர் உரையின் 10 முக்கிய அம்சங்கள் இதோ!

நிதியமைச்சரின் பட்ஜெட் உரை

நிதியமைச்சரின் பட்ஜெட் உரை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2023 பட்ஜெட் உரையில் வேளாண்துறை, சிறுகுறு தொழில், ரயில்வே, வருமான வரி ஆகியவை தொடர்பாக பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2023 பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள பத்து முக்கியம் அம்சங்கள் இதோ:

1. அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்டான இந்த பட்ஜெட் விடுதலை இந்தியாவின் நூற்றாண்டை நோக்கி உருவாக்கப்பட்ட ப்ளூ பிரிட்டாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கில் தேச வளர்ச்சியின் பலன் அனைவருக்கும் சேர வேண்டும் என்பதே பட்ஜெட்டின் இலக்கு

2. இந்திய பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. நடப்பாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்றும் மற்றும் போர் தாக்கத்தால் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், பெரிய பொருளாதார சக்திகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது.

3. பொருளாதார ஸ்திரத்தன்மையை வலிமைபடுத்தி புதிய வேலைகளை உருவாக்கும் சூழலை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு. இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு குறியாக உள்ளது.

4. வேளாண்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்தி விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தின் பலனை கொண்டு சேர்ப்பதே பட்ஜெட்டின் நோக்கம். வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

5. இதுவரை இல்லாத அளவிற்கு ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2013-14 நிதியாண்டை ஒப்பிடும் போது இது 9 மடங்கு அதிகமாகும்.

6. பழங்குடி மக்கள் வாழ்வின் மேம்பாட்டிற்காக வளர்ச்சி PMPBTG என்ற வளர்ச்சி திட்டத்தை அரசு தொடங்கவுள்ளது. இதற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. தொழில் செய்வதற்கான சூழலை ஊக்குவிக்கும் விதமாக பான் கார்டு பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. மேலும், வங்கியின் கேஓய்சி நடைமுறை எளிமைப்படுத்தப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. சிறுகுறு தொழில்துறை மேம்பாட்டிற்காக நிறுவனங்களுக்கு பிணையில்லாக் கடன் வழங்க ரூ.9,000 கோடி கூடுதல் கார்பஸ் தொகை ஒதுக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

9. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான உச்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

10. தனி நபர் வருமான உச்ச வரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2023