முகப்பு /செய்தி /வணிகம் / அரசு சேவைகளுக்கு பான் கார்டு.. பட்ஜெட்டில் வெளிவந்த முக்கிய அறிவிப்பு..!

அரசு சேவைகளுக்கு பான் கார்டு.. பட்ஜெட்டில் வெளிவந்த முக்கிய அறிவிப்பு..!

நிதியமைச்சர் உரை

நிதியமைச்சர் உரை

union budget 2023 | அரசு சேவைகளுக்கு பான் அட்டையை பயன்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ரயில்வே, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை அறிவித்த அவர், வருங்காலங்களில் 1 கோடி விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றார். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் அலையாத்தி காடுகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே

ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்த 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள அட்டையாக பான் அட்டை பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். ஏப்ரல் 1 முதல் சிறு குழு நிறுவனங்களுக்கு பிணையில்லாக் கடன் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

First published:

Tags: Nirmala Sitharaman, Pan card, Union Budget 2023