முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் 2023: இயற்கை விவசாயம்.. தங்கம் விலை.. தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட் 2023: இயற்கை விவசாயம்.. தங்கம் விலை.. தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

Union Budget 2023 | பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வரிச் சலுகைகள், கிராமப்புறப் பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலாத் துறை என தொழில் வணிகத் துறைக்கு பல எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடு சிறு குறு தொழில்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தொழில் தொடங்க எளிய முறையில் கடன் கிடைக்கக்கூடிய வகையிலான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை என்பது மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. மாநில தொழிற்சங்கங்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையே தொடர்ந்து ஒரு கருத்து வேறுபாடு சூழல் இருக்கும் நிலையில், அதை களைவதற்கு ஏதுவாக அரசு புதிய திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறுமா? என எதிர்நோக்கப்படுகிறது.

Budget 2023 Live Updates: மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

இந்தியாவிலேயே தங்கம் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தங்க நகை வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது. தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் பட்சத்தில் சவரனுக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் நூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெறுவதற்கு சாலை போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது தொழில் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மருத்துவ செலவுகள் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மருத்துவ காப்பீடு செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே பிரிவு (eighty D) 80D-இன் கீழ் கிடைக்கும் வரி விலக்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சில வாரங்களில் தமிழ்நாடு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2023