முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் 2023: பஞ்சு வரி குறையுமா.. ஜவுளித்துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட் 2023: பஞ்சு வரி குறையுமா.. ஜவுளித்துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட்

பட்ஜெட்

Union Budget 2023 | மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறையினரின் எதிர்பார்ப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்கிறார். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. இதனால், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், 500க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 370 லட்சம் பேல்கள் பஞ்சு உற்பத்தி செய்யப்படும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து 15 முதல் 20 லட்சம் பேல்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாக பஞ்சாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால், 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Budget 2023 Live: 2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் இங்கே!

தேவைக்கு ஏற்ப பஞ்சு உற்பத்தி இல்லை எனவும், மத்திய அரசு திட்டத்தின் கீழும் பஞ்சுகள் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். பஞ்சுகளை வாங்க குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதும், நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாலை தொழிலை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என்பதே ஜவுளித்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2023