இந்த பட்ஜெட்டில், வருமான வரி சலுகையில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கிறது.. இப்போது இருக்கும் வருமான வரி slab என்ன என்பதை ஒரு முறை பார்த்துவிடலாம்..
இதில் இரண்டு முறைகள் உள்ளன. OLD TAX REGIME, இதில், முதல் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை.. 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை 5% வரி, 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை 20 சதவிதம் வரி, 10 லட்சத்திற்கு மேல் 30% வரி.. இந்த வரியோடு சேர்த்து, SURCHARGE மற்றும் HEALTH & EDUCATION CESS என்று கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த முறையை தேர்வு செய்தால், 80C, 80D போன்ற வருமான வரி சலுகைகளை பெற முடியும்...
அடுத்து, NEW TAX REGIME, இது 2020-21ல் அமலில் இருக்கிறது. இதில், 2.5 லட்சம் வரை வரி இல்லை, 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை 5% வரி, 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை 10 சதவிதம் வரி, 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 15% வரி, 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி. 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25% வரி, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவிதம் வரி.
இந்த NEW TAX REGIME தேர்வு செய்தால் 80C, 80D போன்ற வருமான வரி சலுகைகளை பெற முடியாது. தற்போதைய நிலையில் வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சம் தான். இது உயர்த்தப்படுமா? அல்லது நாம் இப்போது சொன்ன வரி விகிதங்களில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.