மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக தெரிவித்த அவர், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் விளக்கினார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விவசாய தொழில்முனைவோருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தினை உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது எனவும் கூறினார். மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
சைக்கிள், பொம்மைகளுக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவித்த அவர், “டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5 சதவிகிதம் குறைகிறது. இதனால் டிவி விலை குறையும். குறிப்பிட்ட சில மொபைல் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது. மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம், அயன் பேட்டரி இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
புகையிலை பொருட்களுக்கு 16 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அதிகரிப்பட்டுள்ளதால் சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களும் விலை உயர்கிறது. அதேபோல், தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வெள்ளி விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதேவேளையில் புகையிலை மீதான வரி உயர்வுக்கு இணையவாசிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. புகையிலை பொருட்களுக்கு 16 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் விலை உயரும். இதனால் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம் என பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Union Budget 2023