முகப்பு /செய்தி /வணிகம் / பயிர்க் கடன் தள்ளுபடி... விவசாயிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்பு இதுதான்..!

பயிர்க் கடன் தள்ளுபடி... விவசாயிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்பு இதுதான்..!

விவசாயிகள்

விவசாயிகள்

Union Budget 2023 | மத்திய நிதிலை அறிக்கையில் தொழில் துறைக்கு இணையாக வேளாண் துறைக்கும் மானியங்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்கிறார். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. இதனால், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

Budget 2023 Live: 2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் இங்கே!

அதேநேரத்தில் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் அத்துடன், தொழில்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வேளாண் துறைக்கும் தர வேண்டும் என்று கூறும் அவர்கள், தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீட்டு தொகையை உரிய நேரத்தில் பெறும் வகையில் பிரீமியம் தொகையை மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பவைகளும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட சர்க்கரை விற்பனை கழகத்தை, மீண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தினர். இனிப்பை வழங்கும் கரும்பு விவசாயிகள், கசப்பான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்களின் வாழ்வில் தித்திப்பை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

First published:

Tags: Agriculture, Union Budget 2023