முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் 2023: இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்... எகிரும் எதிர்பார்ப்பு..!

பட்ஜெட் 2023: இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்... எகிரும் எதிர்பார்ப்பு..!

பட்ஜெட்

பட்ஜெட்

Union Budget 2023 | பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்கிறார். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. இதனால், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மாத சம்பள ஊழியர்கள் வரி விலக்குகள் மற்றும் ஸ்லாப் விகிதங்களின் அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். சம்பளதாரர்கள் அனுபவிக்கும் அழுத்தத்தை தான் அறிந்திருப்பதாக அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதும், உச்சவரம்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Budget 2023 Live: 2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் இங்கே!

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் 8 புள்ளி 3 சதவிகிதமாக அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2023