Union Budget 2023 Live: வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

Budget 2023 Live: நிதிநிலை அறிக்கை குறித்து பிரதமர் மோடி பாராட்டு. முக்கிய அறிவிப்புகளை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்!

  • News18 Tamil
  • | February 01, 2023, 14:30 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:22 (IST)

    பட்ஜெட் 2023: பிரதமர் பாராட்டு!

    வலுவான இந்தியாவை கட்டமைக்க இந்த பட்ஜெட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்த பட்ஜெட் பெரும் பங்காற்றும். அனைத்து துறை எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது. 

    - பிரதமர் மோடி

    12:38 (IST)

    பழைய வருமான வரி திட்டத்தில் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள்:

    0-3 லட்சம் - 0%
    3- 6 லட்சம் - 5%
    6- 9 லட்சம் - 10%
    9-12 லட்சம் - 15%
    12-15 லட்சம் - 20%
    15 லட்சத்திற்கு மேல் - 30%

    - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

    12:36 (IST)

    பட்ஜெட் 2023: வருமான வரி உச்சவரம்பு மாற்றம்

    புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.

    பழைய வருமான வரி திட்டத்தில் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள்:

    0-3 லட்சம் - 0%
    3- 6 லட்சம் - 5%
    6- 9 லட்சம் - 10%
    9-12 லட்சம் - 15%
    12-15 லட்சம் - 20%
    15 லட்சத்திற்கு மேல் - 30%

    - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

    12:25 (IST)

    பட்ஜெட் 2023: வருமான வரி உச்சவரம்பு மாற்றம்

    5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற நிலை இருந்தது. தற்போது அந்த உச்சவரம்பு 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    - நிதியமைச்சர் அறிவிப்பு

    12:22 (IST)

    சிகரெட் மீதான சுங்க வரி உயர்வு!

    சிகிரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களும் விலை உயர்கிறது.  16 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் என அறிவிப்பு