2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக 2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி அன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெறும். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால், 2024 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும். எனவே, இந்த பட்ஜெட் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பின் பேரில் இன்று நடைபெற்றது.
நிதியமைச்சரின் பட்ஜெட் உரையை எங்கு, எப்படி பார்க்கலாம்
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2023-24 மத்திய பட்ஜெட்டை நேரலையாக சன்சத் டிவி மற்றும் தூர்தர்ஷன் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப உள்ளன. இந்த தொலைக்காட்சிகளின் யூடியூப் பக்கங்களிலும் நேரலை வழங்கப்படும். அதேபோல், PIB தனது ஆன்லைன் தளங்களில் பட்ஜெட்டை நேரடியாக ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
மேலும், இது ஸ்மார்ட்போன் யுகம் என்பதால், பட்ஜெட் தகவல்களை உங்கள் உள்ளங்கைகளிலேயே பெறும் விதமாக "Union Budget Mobile App" என்ற செயலி. அரசு உருவாக்கியுள்ளது. www.indiabudget.gov.in என்ற இணையதளத்தில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக பெறலாம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.