ஹோம் /நியூஸ் /வணிகம் /

பட்ஜெட் 2023 : வருமான வரி உச்ச வரம்பில் தளர்வா?

பட்ஜெட் 2023 : வருமான வரி உச்ச வரம்பில் தளர்வா?

வருமான வரி

வருமான வரி

Union Budget 2023 : மத்திய பட்ஜெட்டில் தாக்கலில் தனி நபர் வருமானரிக்கான உச்ச வரம்பு அதிகரிப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிப்ரவரி 1 ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமானரிக்கான உச்ச வரம்பு அதிகரிப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.

மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் மத்திய அரசுப் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் வரி அடுக்குகள் மற்றும் வட்டி வரம்பிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரி செலுத்துவோரின் சுமையைக் குறைக்கும் வகையில் புதிய டிடிஎஸ் முறையை உருவாக்குவது, வரி விலக்கு பெறுவதற்கான நடைமுறையை முறைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

அதே போல் தனிநபர் வருமான வரி விஷயத்தில் ஆண்டு வருமானம் ரூ. 20 லட்சம் வரை உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமான வரி செலுத்துவோருக்கு அரசு சிறிது நிவாரணம் அளிக்க வேண்டும் என பலரும் பட்ஜெட் ஆலோசனைக் குறிப்பில் கோரிக்கை விடுத்திருந்நதனர். அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக டிடிஎஸ் முறையும் எளிமைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. அதோடு தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பும் அதிகரிப்பட  வாய்ப்பிருக்கிறது. தற்போது தனிநபர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலும், 60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும் வரி செலுத்த தேவையில்லை. இந்த உச்ச  வரம்பில் மாற்றம் கொண்டு வரப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Also Read : பெண் குழந்தையின் பெற்றோரா? மத்திய அரசின் இந்த 4 நிதி திட்டங்களை தவறவிட வேண்டாம்

வருமான வரி உச்சரம்பில் சலுகை கிடைத்தால் மக்களின் ரொக்க கையிருப்பு அதிகரிக்கும் என்றும், இதனால் மந்த நிலையில் இருக்கும் நுகர்வு திறன் கொஞ்சம் வளரும் என்றும், எனவே சாமானிய மக்களின் இயல்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வருமான வரிக்கான உச்ச வரம்பு மாற்றப்பட வேண்டும் என்றும் பொருளியல் வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்தனை கோரிக்கைகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Income tax, Union Budget 2023