முகப்பு /செய்தி /வணிகம் / நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Union Budget 2023 மருத்துவ கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மோடி அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம், ஜன்தன் திட்டங்களின் சாதனைகளை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

நிதியமைச்சர் தனது உரையில், "தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள்.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!

அத்துடன் நாட்டின் சுகாதாரத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மருத்துவ கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றார். மேலும் 2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே

உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

First published:

Tags: Nirmala Sitharaman, Nursing, Union Budget 2023