Home /News /business /

பட்ஜெட் 2022: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை..

பட்ஜெட் 2022: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை..

வரி

வரி

வரி மற்றும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ள நிலையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் பங்களித்த வரி செலுத்துவோர் பாராட்டுக்குரியவர்கள் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

    2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், வருமான வரி விலக்கு தொடர்பான எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. எனவே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்தமாற்றமும் இன்றி 2.50 லட்சமாக தொடர்கிறது.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று  தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை,  இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். அதில், நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது என்றும்  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

    வரி மற்றும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ள நிலையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் பங்களித்த வரி செலுத்துவோர் பாராட்டுக்குரியவர்கள் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதேபோல், மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது என்றும்  அவர் அறிவித்தார்.

    இதையும் படிங்க: பட்ஜெட் 2022: புதிய வருமான வரிவிதிப்பு முறைக்கு மாற தயாராக இருக்கும் வரி செலுத்துவோர்


    அதேவேளையில், நடுத்தர மக்கள் மற்றும் மாத ஊதியம் பெறுபவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சமாகவே தொடர்கிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Income tax, Union Budget 2022

    அடுத்த செய்தி