Home /News /business /

மத்திய பட்ஜெட் 2022 : சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு

மத்திய பட்ஜெட் 2022 : சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு

கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில், இந்தாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்பார்ப்பு உடையதாகவும் அமைந்துள்ளது.

    அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை கவனத்தில் கொண்டு கடந்த ஆண்டு முன்பை விட அதிக தொகை பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டது. உதாரணமாக, தடுப்பூசி வகைக்காக மட்டும் கூடுதலாக ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

    இதேபோன்ற நடவடிக்கை நடப்பாண்டு பட்ஜெட்டிலும் மேற்கொள்ளப்படலாம். மருத்துவமனைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, சுகாதார மற்றும் முன் களப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள், இந்தாண்டு பட்ஜெட்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

    கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில், இந்தாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்பார்ப்பு உடையதாகவும் அமைந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்வேறு வர்த்தக அமைப்பினர், மாநில நிதியமைச்சர்கள், அரசு செயலர்கள் உள்ளிட்டோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    திட்டமிட்டபடி, பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், ஊரக வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனாவின் தாக்குதலில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், தொற்று அதிகரித்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, விமானப் போக்குவரத்து, உள்நாட்டு உள்பத்தி உள்ளிட்ட துறைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க : ‘ஒரு மாவட்டம் ஒரு விமான நிலையம் திட்டம்’ - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..

    சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய பட்ஜெட் 2022 இருக்கும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம்தேதி தொடங்கவுள்ளது. மறுநாள் பிப்ரவரி 1-ம்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    இதையும் படிங்க : கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு

    முதல் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம்தேதியுடன் நிறைவு பெறும். இதன்பின்னர், மார்ச் 14ம்தேதி தொடங்கும் இரண்டாவது கூட்டத் தொடர் ஏப்ரல் 8-ம்தேதி வரை நடைபெறுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Union Budget 2022

    அடுத்த செய்தி