மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜட்டை தாக்கல் செய்த பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும். அடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 2022 பட்ஜெட்டில் இளைஞர்கள், பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இந்த ஆண்டு எல்.ஐ.சி நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம். தொழிற்துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல ஊக்கம் கிடைத்துள்ளது. சிறு குறு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய ரயில்வே மூலம் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.