2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரையில், விலை குறையும் மற்றும் விலை அதிகரிக்கக் போகும் பொருட்கள் குறித்த தகவல் இடம்பெற்றிருந்தன. அதன்படி, குடைக்கான வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
, 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். அதில், குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும் இறக்குமதி பொருட்கள் மற்றும் பாகங்கள் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கக் கூடும்.
அதேவேளையில், ஃபோன்களுக்கான சார்ஜர்கர்கள் மற்றும் கேமராக்கள், அணியக்கூடிய தொழில்நுட்பமான ஸ்மார்ட்வாட்ச்கள், செவிப்புலன் கருவிகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விவசாய கருவிகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள், எஃகு கழிவுகள் மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்புக்கான இரசாயனங்கள் ஆகியவற்றின் விலை குறையக்கூடும்.
டிஜிட்டல் கரன்சிகள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30சதவீதம் வரியும், அவற்றின் பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Union Budget 2022 Highlights: மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்
விலை உயரும் பொருட்கள்
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்
கவரிங் நகைகள்
ஒலிபெருக்கிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள்
சூரிய மின்கலங்கள் மற்றும் தொகுதிகள்
எக்ஸ்ரே இயந்திரம்
குடைகள்
கலப்படமில்லாத எரிபொருள்
விலை குறையும் பொருட்கள்:
தொலைபேசிகளுக்கான சார்ஜர்கள் மற்றும் கேமராக்கள்
ஸ்மார்ட்வாட்ச்கள்
காது கேட்கும் கருவிகள்
ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள்
விவசாய கருவிகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்
எஃகு ஸ்கிராப்புகள்
பதப்படுத்தப்பட்ட சிப்பி, கடம்பா
பெட்ரோலிய சுத்திகரிப்புக்கான இரசாயனங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.