Budget 2022 Live Updates | வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

Union Budget 2022 - 23 Live Updates | Finance Minister Nirmala Sitharaman | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்காவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல்

  • News18 Tamil
  • | February 01, 2022, 12:42 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 8 MONTHS AGO

    AUTO-REFRESH

    14:14 (IST)

    டிஜிட்டல் கரன்சி யாருக்கு பயன்படும் ? ஏழை மக்களுக்கு அதனால் என்ன பயன் ? பெருநிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. கார்பரெட்  நிறுவனங்களை காப்பாற்றவேண்டும் என்பதே பாஜக-வின் நோக்கம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் 

    14:12 (IST)

    மத்திய அரசின் பட்ஜெட் 'பூஜ்ஜிய பட்ஜெட்' என்று விமர்சித்து ராகுல் காந்தி ட்வீட்.

     
    12:39 (IST)

    வருமான வரி விலக்கு மாற்றமில்லை

    வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவே தொடரும்- நிர்மலா சீதாராமன் #Budget2022 | #BudgetWithNews18 | #NirmalaSitharaman


    12:31 (IST)

    2022 ஜனவரி மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாகும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதிகம். ஒரே சந்தை, ஒரே வரியை ஜிஎஸ்டி சாத்தியப்படுத்தி உள்ளது -  நிர்மலா சீதாராமன்

    12:22 (IST)

    வரும் நிதியாண்டில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் முறை ஓராண்டுக்கு நீட்டிப்பு. கிரிப்டோ போன்ற டிஜிட்டல் முறை வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

    12:15 (IST)

    வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய மேம்படுத்த முறை. வருமான வரி கணக்க தாக்கல் செய்யும் போது தவறு ஏற்பட்டால் 2 ஆண்டுகளில் திருத்திக் கொள்ளலாம்- நிர்மலா சீதாராமன்


    12:11 (IST)

    மாநிலங்களுக்கு உதவும் வகையில் வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அரசின் மொத்த செலவு ரூ.39.54 லட்சம் கோடியாக உள்ளது- நிர்மலா சீதாராமன்

    12:4 (IST)

    ரிசர்வ் வங்கி மூலம் 2022 - 23ம் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் - நிர்மலா சீதாராமன்


    12:1 (IST)

    #Budget2010 #NirmalaSitharaman

    குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்த 2 லட்சம் அங்கன்வாடிகளின் தரம் உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்


    11:57 (IST)

    சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி. நாட்டின் 75 மாவட்டங்களில் இ-பேங்கிங் வசதி ஏற்படுத்த முடிவு. ஆயுத தளவாட இறக்குமதியை குறைக்க நடவடிக்கை- நிர்மலா சீதாராமன் - நிர்மலா சீதாராமன்