Home /News /business /

Budget 2022: பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு- நிர்மலா சீதாராமன்

Budget 2022: பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு- நிர்மலா சீதாராமன்

Union Budget 2022-23, defence announcements

Union Budget 2022-23, defence announcements

Union Budget 2022: பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

    மத்திய பட்ஜெட் 2022-23 நாடாளுமன்றத்தில் இன்று நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.  இதில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுமென்று கூறியுள்ளார்.

    முக்கிய அம்சங்கள் வருமாறு:

    பாதுகாப்புத்துறை மற்றும் ஆராய்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25% தொகை தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க ஊக்கமளிக்கப்படும். டிஆர்டிஓ அமைப்புடன் இணைந்து ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களைத் தயாரிக்க, வடிவமைக்க தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

    2022-23 நிதியாண்டில் நாட்டின் ராணுவக் கொள்முதல்களில் 68% கொள்முதல் உள்நாட்டு நிறுவனங்களிலிருந்து பெறப்படும்.

    5ஜி மொபைல் சேவை:

    அதே போல் 2022-23ம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை தொடங்கப்படும். இதற்கான அலைவரிசை ஏலம் விரைவில் தொடங்கப்படும். கிராமப்புறங்களிலும் தகவல் தொடர்பு இல்லாத இடங்களிலும் பிராட் பேண்ட் இணைப்பு கிடைக்க வசதி செய்யப்படும். மின்சார கார்கள், டூ வீலர் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்கான கொள்கைகளும் உருவாக்கப்படும்.

    கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள்:

    2022-23-ல் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள் இழை அமைக்கப்படும். இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டிணையும். சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டம் இருக்கும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Defence Minister Nirmala Sitharaman, Union Budget 2022

    அடுத்த செய்தி