Home /News /business /

கிரிப்டோ கரன்சி வருமானங்களுக்கு 30% வரி: கிரிப்டோ வருமான வரி குறித்து முக்கியமானது இதுதான்

கிரிப்டோ கரன்சி வருமானங்களுக்கு 30% வரி: கிரிப்டோ வருமான வரி குறித்து முக்கியமானது இதுதான்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • News18
  • Last Updated :
    பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். விர்ச்சுவல் மூலதன சொத்துக்கள் மீதான வரியில் 1% TDS-ம் விதிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

    இந்தியாவில் சுமார் 10 கோடி பேர்களுக்கும் மேல் டிஜிட்டல் கரன்சி முதலீட்டாளர்களாக உள்ளனர், இந்நிலையில் இது ஒரு ஊகவணிகத்துறை என்பதால் மொத்தமாக 30% இதன் வருவாய் மீது மத்திய அரசு இன்றைய பட்ஜெட்டில் வரி விதித்துள்ளது. டிஜிட்டல் டோக்கன்களில் இந்தியா ஒரு பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இதனையடுத்து மெய்நிகர் பண முதலீடு அல்லது கிரிப்டோ முதலீடுகளுக்கு வரி விதிப்பது கட்டாயமாகியுள்ளது. இதனையடுத்து பட்ஜெட் 2022-23- தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பை அறிவித்தார்.

    எந்த ஒரு கிரிப்டோ கரன்சி சொத்துக்கும் 30% வரி உண்டு. கரன்சியை வாங்குவதற்கான தொகைக்கான கழிவு மட்டுமே கணக்கில்அனுமதிக்கப்படும். பரிவர்த்தனையில் ஏற்படும் நட்டங்களை கணக்கில் கொண்டு வர முடியாது.

    இது தொடர்பான பிரிவு 115BBH என்ன கூறுகிறது எனில், டிஜிட்டல் சொத்துக்கள் மாற்றத்தினை கணக்கில் கொண்டு வரலாம், இதற்கு 30% வருமான வரி உண்டு. இதற்கான கணக்கீடு தனி, ஒட்டுமொத்த வருமானத்திலிருந்து இந்த டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை வருமானம் கழிக்கப்பட்டு இதற்கு மட்டும் 30% வரி விதிக்கப்படும்.

    அதே போல் கிரிப்டோ சொத்துக்கள் பரிமாற்றத்தின் மீதும் ஒரு வரம்பின் கீழ் 1% வரை TDS-ம் விதிக்கப்படும். இதன் மூலம் கிரிப்டோ பரிமாற்றங்களை அரசு கூர்ந்து கண்காணிக்க முடியும் என்கிறார், ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அமித் சிங்கானியா.

    இந்த கிரிப்டோ கரன்சி வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு கிரிப்டோ கரன்சிக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளித்து விட்டதாக இந்தச் சந்தையில் இதனை கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் மேலும் பலரும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்குள் இறங்கலாம் என்று தெரிகிறது.

    இந்த சட்டத்திருத்தம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலாகும். கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிப்பை இந்த துறையைச் சார்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Crypto currency, Cryptocurrency, Income tax, Union Budget 2022

    அடுத்த செய்தி