Union Budget 2021: பெட்ரோல், டீசல் மீது வேளாண் வரி விதிப்பு - விலை உயருமா?

Union Budget 2021: பெட்ரோல், டீசல் மீது வேளாண் வரி விதிப்பு - விலை உயருமா?

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Share this:
    மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் பெட்ரோடல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியை அறிவித்தார்.

    அதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று அச்சம் நிலவியது. ஆனால் இந்த புதிய வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனென்றால் டீசல் மற்றும் பெட்ரோல் மீது மற்ற வரிகளில் மாற்றம் அல்லது குறைப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான புதிய வரிகள் நுகர்வோரை பாதிக்காது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நுகர்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சுமை இருக்காது“ என்றுள்ளார்.



    மத்திய பட்ஜெட்டில் மேலும் சில பொருட்கள் மீதும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆல்கஹால் 100%, தங்கம் மற்று வெள்ளி 2.5% , பாமாயில் 17.5% , சூரியகாந்தி எண்ணெய் 35%, ஆப்பிள் மற்றும் பட்டாணி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: