EPF முதலீட்டுக்கு வருமானவரி விதிப்பு - நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்!

EPF முதலீட்டுக்கு வருமானவரி விதிப்பு - நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

தற்போதைய விதிப்படி, ஒவ்வொரு ஊழியரின் ஊதியத்துக்கு ஏற்ப 12 விழுக்காடு கட்டாயம் EPF சேமிப்பாக பிடிக்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் விரும்பினால் அதற்கு மேலான தொகையையும் EPF, VPF செலுத்தலாம் என்பதால், இதனைப் பயன்படுத்தி அதிக ஊதியம் பெறுபவர்கள் வரியில்லா வருமானத்தை பெற்றுவந்தனர். தற்போது அதற்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
EPF-ல் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களின் வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறையாக நாட்டின் முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார். மாத சம்பளதாரர்களுக்கு வரி விலக்கு சலுகை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தகைய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வருமான வரி மற்றும் வருமான வரிப் பலகையில் எவ்விதமான மாற்றத்தையும் மத்திய அரசு அறிவிக்காமல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. 

மாறாக, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேலான EPF முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டிக்கும், யூலிப் திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேலான முதலீட்டில் கிடைக்கும் வருமானத்துக்கும் வருமான வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கலின்போது வரி விதிப்பு தொடர்பாக பேசிய அவர், EPF மற்றும் யூலிப் திட்டங்களில் அதிக ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி பெறுவதற்காக அதிக முதலீடுகளை செய்து வருவதை அரசு கவனித்துள்ளதாக தெரிவித்தார். அதனால், அத்தகைய முதலீட்டில் வரியில்லாத வருமானத்தை ஈட்டுவதற்கு தற்போது கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேலான முதலீடு மூலம் கிடைக்கும் வருமானங்களுக்கு வருமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். 

அவர் கூறியபடி, EPF மற்றும் VPF திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். அதாவது, மாதம் சம்பளமாக 1.73 லட்சம் பெறுபவர்கள் அல்லது 20,833 ரூபாய் வரையில் PF மற்றும் VPF திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு புதிய அறிவிப்பின்படி எந்த வரி பாதிப்பும் இருக்காது.

Also read... Gold Rate: தொடர் வீழ்ச்சியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

இதே விதிமுறை யூலிப் திட்டங்களுக்கும் பொருந்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி, வரி சேமிப்புக்காக நீங்கள் யூலிப் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் வருடம் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. அதற்கு மேலான முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானங்களுக்கு 10 விழுக்காடு வரை வருமான வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். 

தற்போதைய விதிப்படி, ஒவ்வொரு ஊழியரின் ஊதியத்துக்கு ஏற்ப 12 விழுக்காடு கட்டாயம் EPF சேமிப்பாக பிடிக்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் விரும்பினால் அதற்கு மேலான தொகையையும் EPF, VPF செலுத்தலாம் என்பதால், இதனைப் பயன்படுத்தி அதிக ஊதியம் பெறுபவர்கள் வரியில்லா வருமானத்தை பெற்றுவந்தனர். தற்போது அதற்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: