முகப்பு /செய்தி /வணிகம் / மத்திய பட்ஜெட் 2021: உங்கள் தனிப்பட்ட நிதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சங்கள்!

மத்திய பட்ஜெட் 2021: உங்கள் தனிப்பட்ட நிதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடுமையான வரி ஏய்ப்பு வழக்குகள் (Serious tax evasion cases), ஒரு வருடத்தில் ரூ .50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தை மறைத்து வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

  • Last Updated :

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அரசின் 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், வரி அடுக்குகளில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை (tax slabs in Income Tax Returns) இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ITR ல் சில மாற்றங்கள் உட்பட வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம் என பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளது. இருந்தும் இந்த பட்ஜெட்டில் உங்கள் தனிப்பட்ட நிதிகளை பாதிக்கக்கூடிய விஷயங்களை கீழே காண்போம்.

மூத்த குடிமக்களுக்கு ITR இல்லை (NO ITR FOR SENIOR CITIZENS):

மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வட்டி மற்றும் ஓய்வூதியம் மூலம் வரும் வருவாயை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.

சமூக பாதுகாப்பு நன்மை - பல தொழிலாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது (SOCIAL SECURITY BENEFIT EXTENDED TO MANY MORE WORKERS):

கோவிட் -19 காரணமாக கடந்த ஆண்டு வேலை இழந்த பல வரி செலுத்தும் குடிமக்கள் மற்றும் ஃப்ரீலான்சிங் பணிகளை மேற்கொள்ளபவர்களுக்கு இந்த 2021 பட்ஜெட்டில் சிறிது நிவாரணம் கிடைக்கிறதாம். சமூக பாதுகாப்பு நன்மைகள் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஈ-காமர்ஸ் தொழிலாளர்கள் இப்போது Employees’ State Insurance Scheme (ESI), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund (EPF)) மற்றும் குறைந்தபட்ச ஊதிய விதி ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். மேலும் பெண்கள், நைட் ஷிப்டுகளிலும் அனைத்து பிரிவுகளிலும் வேலை செய்ய போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

நிதி தயாரிப்புகளுக்கான முதலீட்டு சாசனம் (INVESTMENT CHARTER FOR FINANCIAL PRODUCTS):

நிதி தயாரிப்புகளின் தவறான விற்பனையை குறைப்பதற்காக, ஒரு முதலீட்டு சாசனத்தை அமைக்கப்போவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த சாசனம் நிதித்துறை முழுவதும் உள்ள அனைத்து தயாரிப்புகளின் முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். இது குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை, ஆனால் இந்த சாசனம் முதலீட்டாளர்களின் உரிமைகள், அவர்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதை தீர்க்கும் முறை மற்றும் பலவற்றைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

முன் நிரப்பப்பட்ட வரி படிவங்கள் (PRE-FILLED TAX FORMS):

உங்கள் வருமான வரியை தாக்கல் செய்வதை எளிதாக்குவதற்கு, மூலத்தில் வரி விலக்கு தவிர, இப்போது வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலிருந்து மூலதன ஆதாயங்கள் மற்றும் நலன்களின் விவரங்கள் முன் நிரப்பப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். முன் நிரப்பப்பட்ட படிவங்கள் வரி இணக்கத்தை மேம்படுத்துகின்றன, மேலும் வரி செலுத்துவோர் தங்கள் வரிகளை விரைவாகவும் சரியாகவும் தாக்கல் செய்ய உதவுகின்றன.

 பேஸ்லெஸ் மதிப்பீடுகள் (FACELESS ASSESSMENTS):

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் பேஸ்லெஸ் மதிப்பீட்டிற்கு மேலும் உந்துதலைக் கொடுத்துள்ளதாகவும், அதை மேலும் வலுவானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் MoneyControl.com தெரிவித்துள்ளது. ஒரு (FACELESS) தகராறு தீர்க்கும் குழு (dispute resolution committee) அமைக்கப்படும். ரூ .50 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் மற்றும் ரூ .10 லட்சம் வரை சர்ச்சைக்குரிய வருமானம் உள்ள எவரும் இந்த குழுவை அணுகலாம்.

என்.ஆர்.ஐ.க்களுக்கான நம்பிக்கை (RELIEF FOR NRIs):

NRIக்கள், குறிப்பாக இந்தியா திரும்புவோர் மீது இரட்டை வரிவிதிப்பு மாற்றத்தை பற்றிய செய்தியை நிதியமைச்சர் அறிவித்தார். இந்தியாவில் செலுத்தப்படும் வரிகளுக்கு கடன் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்பவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு)

வைப்புத்தொகை காப்பீடு சிறப்பாக கட்டமைக்கப்பட வேண்டும் (DEPOSIT INSURANCE COVER TO BE BETTER STRUCTURED)

வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கள் வங்கிகள் சிக்கலில் சிக்கும்போது, வைப்புத்தொகை காப்பீட்டுத் தொகையை கோருவதற்கு அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒரு சிறந்த கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வங்கி வைப்புத் தொகையாளர்களுக்கான வைப்பு காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தியது. ஒரு சிறந்த மற்றும் திருத்தப்பட்ட மெக்கானிசமானது வங்கி பணப்புழக்கத்திற்குச் செல்வதற்கு முன்பே வைப்புத்தொகையாளர்களுக்கு உதவும். "இது ஒரு சாதகமான வளர்ச்சியாகும், அண்மை காலங்களில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு சிலவற்றை செய்வதற்கு தடை விதித்ததையும், வைப்புத்தொகையை மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை அளித்ததையும் நாம் கண்டோம். இதனால், வங்கி வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும், என்று MoneyControl.com ஐ மேற்கோளிட்டு, BankBazaar.com இன் தலைமை நிர்வாக அதிகாரி, ஆதி ஷெட்டி கூறியுள்ளார்.

வீட்டுக் கடன் வட்டி மீதான கழித்தல் நீட்டிக்கப்பட்டுள்ளது (DEDUCTION ON HOME LOAN INTEREST EXTENDED)

மலிவு வீட்டை வாங்குவதற்கான விலக்கு பெறுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளுடன் மலிவு வீட்டுவசதி இப்போது ஒரு  ஊக்கத்தைப் பெறுகிறது, இப்போது வீட்டுக் கடனை எடுப்பவர்களுக்கு 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்ஃப்ராவுக்கான வரி-செயல்திறன் பூஜ்ஜிய கூப்பன் பத்திரங்கள் (TAX-EFFICIENT ZERO COUPON BONDS FOR INFRA):

விரைவில், சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஒரு புதிய கருவி இருக்கும் என்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்காக, மத்திய பட்ஜெட் 2021, உள்கட்டமைப்பு கடன் நிதிகள் இப்போது வரி-திறனுள்ள பூஜ்ஜிய கூப்பன் பத்திரங்களை வழங்குவதன் மூலம் நிதி திரட்ட முடியும் என்று முன்மொழிந்தது. இந்த பத்திரங்கள் வழங்கும் வருமான வரி சலுகைகளின் அளவு குறித்து மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

Also read... Gold Rate: தொடர் வீழ்ச்சியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

விரைவான வரி தீர்மானங்கள் (FASTER TAX RESOLUTIONS):

வருமான வரி தாக்கலின் கீழ் மதிப்பீட்டை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடு ஆறு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கடுமையான வரி ஏய்ப்பு வழக்குகள் (Serious tax evasion cases), ஒரு வருடத்தில் ரூ .50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தை மறைத்து வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் 10 ஆண்டுகளில் மறு மதிப்பீடு திறக்கப்படலாம். இது வரித்துறை அதிகாரிகள் மற்றும் வரி செலுத்துவோர் (tax authorities and tax payers) மீதான சுமையை எளிதாக்கும் மற்றும் வழக்குகளை விரைவாக தீர்க்கவும் வழி வகுக்கும்.

இதுமட்டுமன்றி அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Budget 2021, Personal Finance