Home /News /business /

விவசாயிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் கடன் - சென்னையில் அறிமுகமானது KCC!

விவசாயிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் கடன் - சென்னையில் அறிமுகமானது KCC!

விவசாயிகள்

விவசாயிகள்

KISSAN CREDIT CARD | இந்த திட்டம் நமது விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் எளிதாக கடன் வசதி கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னையில் விவசாயிகளுக்கு உடனடி கடன் வழங்கும் கிஸான் கிரெடிட் கார்டு திட்டத்தினை பெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

    சென்னையில், இந்திய ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட் கார்டுக்கான (KCC) முன்னோடித்திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது.

    தற்போது இருந்துவரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும். தொடக்கத்திலிருந்து முடிவு வரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இச்செயல்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இச்செயல்திட்டத்தில் இணைகின்ற செயல்நடவடிக்கை E-kyc வழியாக நிகழும்.TNeGA என்ற இணைய வாசலிலிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நில பதிவுருக்கள் / ஆவணங்கள் பெறப்படுகின்றன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி அளவு தானியக்க முறையில் கணக்கிடப்படுகிறது இதற்கான ஆவண செயலாக்கம், e-sign வழியாக நிகழ்கிறது.

    ALSO READ | UIDAI : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

    இவ்வளவு சிறப்பு வசதிகள் கொண்ட இச்செயல்திட்டமானது, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு குறைந்த மதிப்பிலான, சிறிய தொகையிலான கடன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. மேலும், இதுவரை சேவை வழங்கப்படாத மற்றும் குறைவாக சேவை வழங்கப்படுகிற கிராமப்புற பொதுமக்களுக்கு திறன்மிக்க கடன்வசதியினை ஏற்பாடு செய்வதற்காக இந்த செயல்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இது குறித்து பேசிய பெடரல் வங்கியின் மேலாண் இயக்குனர் ஷியாம் சீனிவாசன், நிலம் மற்றும் பிற சொத்து உரிமைத்துவ பதிவுருக்கள் மற்றும் ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும்போது, நமது சமூகத்தில் அதிக தகுதியுள்ள பிரிவினரின் இல்ல கதவுகளுக்கு கடன் வசதி சென்றடைவதற்கு டிஜிட்டல் உதவுமென்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ALSO READ | வேலையில் இருந்து ரிட்டயர்மென்ட் பெறுவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்திடுங்கள்!

    தொடர்ந்து பேசிய ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் (RBIH)-ன் தலைமை செயலாக்க அதிகாரி ராஜேஷ் பன்சால், இந்த திட்டம் நமது விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் எளிதாக கடன் வசதி கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது என்றும் நாடு முழுவதும் இந்த திட்டம் அமலாக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Bank, Business, Credit Card, Farmer, Reserve Bank of India

    அடுத்த செய்தி