ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.80% ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்

ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.80% ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

லாக்டவுன் இல்லாத மாதத்தில் வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி தாக்கம் இதுவேயாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தற்போது நமது நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக இந்த வீழ்ச்சி உயர்ந்துள்ளது. முக்கியமாக விவசாயத் துறையில் 13 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார சிந்தனைக் குழுவான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி தெரிய வந்துள்ளது.

இது தற்போது அதிர்ச்சிகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் வேலைகளின் எண்ணிக்கையில் என்பது அதிக வீழ்ச்சியில் இருந்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் பல மடங்கு அதிகமாக இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வீழ்ச்சி என்பது மே மாதத்தில் 6.62 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 8.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிஎம்ஐஇ தரவுகளின்படி, நகர்ப்புறங்களில் மே மாதத்தில் பதிவான 7.12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தற்போது ​​7.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதை பற்றிய அறிக்கையில், “லாக்டவுன் இல்லாத மாதத்தில் வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி தாக்கம் இதுவேயாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், கிராமப்புறங்களில் விவசாய வேலைகள் மந்தமாக இருக்கும்போது இப்படிப்பட்ட வேலை வீழ்ச்சி உண்டாகும் என்றும், விதைப்பு தொடங்கும் போது இது பெரும்பாலும் தலைகீழாக மாறும் என்றும்" சிஎம்ஐஇ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்து கொண்டார்.

அதன்படி, 13 மில்லியன் பேர் வேலை இழந்த நிலையில், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை 10 மில்லியனாக சுருங்கியதால் மீதமுள்ளவர்கள் தொழிலாளர் சந்தைகளை விட்டு வெளியேறி உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீழ்ச்சியானது முக்கியமாக முறைசாரா சந்தைகளில் அமைந்துள்ளது என்றும், இது பெரும்பாலும் தொழிலாளர் இடம்பெயர்வுப் பிரச்சினையாக இருக்கலாம் என்றும் பொருளாதாரச் சரிவு அல்ல என்றும் வியாஸ் கூறினார்.

Also Read : உங்கள் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை வேறு கிளைக்கு ஆன்லைன் மூலம் எப்படி மாற்றுவது.?

மேலும், "பருவ மழையின் மாறுபாடுகளால் இத்தகைய பெரிய அளவிலான உழைப்பு மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்பது கவலைக்குரியது," என்று அவர் கூறினார். அதே போன்று ஜூன் 2022-இல் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே 2.5 மில்லியன் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர். "சம்பள வேலைகளின் அதிகரித்து வரும் பாதிப்பையும் ஜூன் மாதத்தின் தரவுகள் அம்பலப்படுத்தி உள்ளது. இத்தகைய வேலைகளைச் சேமிக்கவும் உருவாக்கவும் பொருளாதாரம் என்பது எதிர்காலத்தில் இருப்பதை விட வேகமாக வளர வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஹரியானாவில் 30.6 சதவீதமும், ராஜஸ்தானில் 29.8 சதவீதமும், அஸ்ஸாமில் 17.2 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 17.2 சதவீதமும், பீகாரில் 14 சதவீதமும் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது என்று இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சரிவை சமாளிக்க எத்தகைய திட்டங்களை அரசுகள் உருவாக்க போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Business, Employment, Job