ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணமில்லா பரிவர்த்தனைகள் குறைவதற்கு இது தான் காரணம் - ஐஐடி ஆய்வறிக்கை

பணமில்லா பரிவர்த்தனைகள் குறைவதற்கு இது தான் காரணம் - ஐஐடி ஆய்வறிக்கை

கேஷ்-லஸ் பிஓஎஸ், ரொக்கப்பணம்

கேஷ்-லஸ் பிஓஎஸ், ரொக்கப்பணம்

ஆட்டோவில் செல்லும் போது மீட்டருக்குச் சூடு வைத்துக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போல கேஷ்லெஸ் பரிவர்த்தனைகள் மீதான கட்டணம் உள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனைகள் குறைந்து, ரொக்கப் பரிவர்த்தனை அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்று மும்பை ஐஐடி ஆய்வு செய்துள்ளது.

  மும்பை ஐஐடி செய்துள்ள ஆய்வில் ‘கேஷ்லெஸ் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையைச் செய்யும் போது அங்கிகரிக்கப்படாத பலவேறு கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே ரொக்கப் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.

  டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை போன்றவை மூலம் பணம் பரிவர்த்தனை செய்யக் கட்டணம் பிடிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தைத் தவிர்க்கவே பலரும் ரொக்கப் பணம் பரிவர்த்தனையைச் செய்கின்றனர்.

  கேஷ்லெஸ் பரிவர்த்தனை செய்யும் போது கட்டணங்கள் பிடிக்கப்படுவதை வணிகர்கள் முதல் வாடிக்கையாளர் வரை யாரும் விரும்பவில்லை. இதனால் கேஷ்லெஸ் பரிவர்த்தனை குறைவது மட்டுமில்லாமல் வரி ஏய்ப்புகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

  2018-ம் ஆண்டுக் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் 5.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதில் கிரெடிட் கார்டு எம்டிஆர் (MDR) கட்டணம் வசூல் மட்டும் 10,000 கோடி ரூபாய். டெபிட் கார்டு எம்டிஆர் கட்டணம் வசூல் 3,500 கோடி ரூபாய். டெபிட் கார்டுகளில் செய்யப்படும் 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்திலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது.

  மொபைல் மூலம் உடனடியாக வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் பரிவர்த்தனை செய்ய உதவும் பிம் மற்றும் யூபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  வணிகர்கள் அதிகளவில் கட்டணம் வசூலித்து, வரி ஏய்ப்புச் செய்து மோசடியில் ஈடுபடுவதைக் குறைக்கவே கேஷ்லெஸ் பரிவர்த்தனைகள் அறிமுகம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் பரிவர்த்தனை கட்டணங்கள் என்ற பெயரில் அங்கிகரிக்கப்படாத கட்டணங்களை வங்கிகள் வசூலித்து மோசடியில் ஈடுபடுவது போன்று இது உள்ளது.

  ஆட்டோவில் செல்லும் போது மீட்டருக்குச் சூடு வைத்துக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போலக் கேஷ்லெஸ் பரிவர்த்தனைகள் மீதான கட்டணம் உள்ளது” என்றும் மும்பை ஐஐடி ஆய்வில் கூறியுள்ளனர்.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Demonetisation