காங். ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டியில் ஒரே அடுக்கு வரிவிதிப்பு - ராகுல் காந்தி

சீனாவை பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் முன்னேற உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் தேவை என்றும் ராகுல் காந்தி கூறினார்.

news18
Updated: March 13, 2019, 1:43 PM IST
காங். ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டியில் ஒரே அடுக்கு வரிவிதிப்பு - ராகுல் காந்தி
ராகுல் காந்தி
news18
Updated: March 13, 2019, 1:43 PM IST
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அப்போது மாணவி ஒருவர் உங்கள் தலையிலான ஆட்சி வந்தால் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்று கேள்விகேட்டார்.

மாணவியின் கேள்விக்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, “பணமதிப்பிழக்க நடவடிக்கை போன்ற ஒரு முடிவை அனைவரையும் கலந்தாலோசிக்காமல் இப்போது நடந்தது போல எடுத்திருக்க மாட்டோம்.

மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் மனநிலையுடன் தொடர்புடையது. அதற்கு மக்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, சமத்துவம் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி முறையில் 5 அடுக்குகள் உள்ளது. எனவே வணிகர்களுக்குக் கடினமான ஒன்றாக உள்ளது. அதைக் குறைத்து ஒன்றாக்குவோம்.

பணமதிப்பிழப்பு செய்து மக்கள் பணத்தை வங்கியில் பெற்றுக்கொண்ட அரசு மற்றும் வங்கிகள் நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி போன்றவர்களுக்குக் கடனாக வழங்கிவிட்டது.

நீரவ் மோடிக்கு வங்கிகள் 35,000 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் ஒரு வேலை வாய்ப்பு கூட உருவாகவில்லை.
Loading...
அதில் 35 லட்சம் ரூபாயை உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு அளித்திருந்தால் நீரவ் மோடியை விட அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்பீர்கள் என்று நான் பந்தயம் கட்டுகிறேன்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. சீனாவில் 24 மணி நேரத்தில் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 450 வேலை வாய்ப்பு தான் என்று அரசு தரவுகள் கூறுகின்றன.

சீனாவை பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் முன்னேற உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் தேவை” என்றும் ராகுல் காந்தி கூறினார்.

மேலும் பார்க்க:
First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...