ஹோம் /நியூஸ் /வணிகம் /

விஜய் மல்லையா மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்: நாடு கடத்தப்படுவாரா?

விஜய் மல்லையா மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்: நாடு கடத்தப்படுவாரா?

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளரான சாஜித் ஜாவித் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு மும்மரமாக உள்ளது.

  இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளரான சாஜித் ஜாவித் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு ஃபிப்ரவரி மாதம் அனுமதியளித்து இருந்தார்.

  இங்கிலாந்து வெளியுறவு செயலாளரின் இந்த முடிவை எதிர்த்து விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  இதை விசாரித்த இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதை அடுத்து விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அடுத்து 6 மாதத்திற்கு பிறகே இந்த வழக்கு குறித்து மல்லையாவால் மேல் முறையீடு செய்யமுடியும் என்றும் கூறப்படுகிறது.

  இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் சாஜித் ஜாவித் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் பார்க்க:


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  ஐ.பி.எல் தகவல்கள்

  POINTS TABLE:

  ORANGE CAP:

  PURPLE CAP:

  RESULTS TABLE:

  SCHEDULE TIME TABLE:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Vijay Mallya