ஊதிய உயர்வு, வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என கூறிய நிறுவனம்!

news18
Updated: May 27, 2019, 4:49 PM IST
ஊதிய உயர்வு, வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என கூறிய நிறுவனம்!
போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ்
news18
Updated: May 27, 2019, 4:49 PM IST
இங்கிலாந்தில் உள்ள சட்ட ஆலோசனை நிறுவனம் ஒன்று, தங்களது ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என்ற இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

இங்கிலாந்தின் ப்ளைமவுத் (Plymouth) நகரிலிருந்து செயல்பட்டு வரும் போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் (Portcullis Legals) என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என்ற நடைமுறையை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளது.

ஊழியர்களுக்கு இந்த இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், முன்பு வேலை செய்ததை விட மிக உற்சாகமாக பணிகளைச் செய்வதாகவும், வாடிக்கையாளர்களும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சிறப்பான சேவைகளைப் பெறுவதாகக் கூறுவதாகவும் போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்ட போது, “நியூசிலாந்தில் இதுபோன்று வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் முறையை நிதி நிறுவனம் ஒன்று செய்துவந்தது.

அதைப் பார்த்த பிறகு போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் நிறுவனமும் ஏன் இதை நாம் செய்து பார்க்கக் கூடாது என்ற முடிவை எடுத்தது.

தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை 5 மாதம் வரை சோதனை ஓட்டமாகத் தொடரும். அதன் பிறகு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்பதை நிரந்தமாக நடைமுறைப்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பார்க்க:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...