அமேசான் வரி மோசடி சர்ச்சை: இஃன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கிற்கு என்ன தொடர்பு?

இஃன்போசிஸ் நாராயணமூர்த்தி - மருமகன் ரிஷி சுனக்

பிரிட்டன் அமைச்சர்களிலேயே மிகவும் செல்வந்தரராக ரிஷிசுனக் இருப்பதாக கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

  • Share this:
அமேசான் இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் Cloudtail India 56 கோடி ரூபாய் வரி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தி கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்திக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் இடையேயான கூட்டு ஒப்பந்த திட்டத்தின் அங்கமாக இருப்பது Cloudtail நிறுவனம்.

2019ம் ஆண்டு இ-காமர்ஸ் தொழில்களின் அந்நிய நேரடி முதலீட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் காரணமாக அமேசான் நிறுவனம் தன்னுடைய பங்கை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக Cloudtail நிறுவனத்தின் பங்குகளை அதிகரித்தது.

Cloudtail நிறுவனத்தில் நாராயணமூர்த்தியின் Catamaran வெஞ்சர்ஸ் நிதி நிறுவனத்திற்கு 76% பங்குகள் இருப்பதாகவும், 24% பங்குகள் அமேசானிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிளவுட் டெயில் நிறுவனத்திலும் அமேசானின் முன்னாள் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக ‘தி கார்டியன்’ தெரிவித்துள்ளது.

Also Read:   ராஜஸ்தான் காங்கிரஸுக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ள போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம்!

இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளாக மிகவும் சொற்ப அளவிலான வரியை மட்டுமே இந்த நிறுவனம் செலுத்திவந்ததாகவும் அதன் காரணமாக வரித்துறையினர் Cloudtail நிறுவனம் 56 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து வரித்துறையினரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கண்ட குற்றச்சாட்டு இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுவதாக இருக்கலாம் என கார்டியன் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் (ஜி 7) நிதி அமைச்சர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக வரி செலுத்த வடிவமைக்கப்பட்ட உலகளாவிய ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டனர். இந்த கூட்டத்தினை வழிநடத்தியவர் நாராயணமூர்த்தியின் மருமகனும், பிரிட்டன் அரசின் தலைமை அமைச்சராக இருப்பவருமான ரிஷி சுனக்.

நிறுவனங்கள் வணிகம் செய்யும் நாடுகளில் அதிக வரி செலுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவை ரிஷி சுனக் ஆதரித்த சில நாட்களுக்குள் இந்த வரி சர்ச்சை விவகாரத்தை கார்டியன் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரிட்டன் அமைச்சர்களிலேயே மிகவும் செல்வந்தரராக ரிஷிசுனக் இருப்பதாக கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. அதே போல ரிஷி சுனக்கின் மனைவியும், நாராயணமூர்த்தியின் மகளுமான அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்து மதிப்பைக்காட்டிலும் கூடுதல் என தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரி மோசடி விவகாரத்தில் அமேசான் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: