• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் 2.0... நீங்கள் பெறுவது எப்படி?

மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் 2.0... நீங்கள் பெறுவது எப்படி?

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

  • Share this:
    news on பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்திரபிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மேலும் ஒரு கோடி பெண்கள் பயன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உஜ்வாலா திட்டம் என்றால் என்ன?

    இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016-ம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் (பட்டியலின, பழங்குடியினர், பிரதமரின் ஆவாஸ் யோஜானா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரவுகள், வனவாசிகள், தீவுகள்) சேர்ந்த சுமார் 5 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது இலக்காக நிர்ணயக்கப்பட்டது.

    உஜ்வாலா 2.0 திட்டம் என்ன?

    2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 ஆம் ஆண்டில் 1 கோடி புதிய பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டிப்பதாக அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 8 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    Also read : வெறும் ரூ.1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

    பலன்கள்

    பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிப்பது எப்படி?

    மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்த்திற்கு குறைந்தபட்ச ஆவணங்களே தேவைப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தை பெறுவதற்கு குடும்ப அட்டை அல்லது நிலையான இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை தேவையில்லை. குடும்ப உறுப்பினர்களின் விவரம் மற்றும் குடும்ப சான்று மட்டுமே போதும்.

    - விண்ணப்பதாரர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்

    - விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

    - பெண்ணின் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ்  இருக்க வேண்டும்

    - வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான ஆவணம் கட்டாயம் தேவை

    - விண்ணப்பதாரரின் எந்த குடும்ப உறுப்பினரின் பெயரிலும் எல்பிஜி இணைப்பு இருக்கக்கூடாது.

    Also Read : இதை செய்யாவிட்டால், பி.எஃப் பணம் கிடைக்காது... மாத ஊதியதாரர்கள் அவசியம் படிங்க.

    ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பித்தல்:

    பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள எல்பிஜி விநியோக நிறுவனத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் இருக்கும்போது, ​​விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளம் pmujjwalayojana.com க்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள எல்பிஜி மையத்தில் இந்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: