Home /News /business /

வீட்டுக்கே வரும் ஆதார் சேவைகள் - 48000 தபால் ஊழியர்களுக்கு பயிற்சி தரும் UIDAI!

வீட்டுக்கே வரும் ஆதார் சேவைகள் - 48000 தபால் ஊழியர்களுக்கு பயிற்சி தரும் UIDAI!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Aadhaar Card | தற்போது UIDAI 72 நகரங்களில் 88 ஆதார் சேவா கேந்திராவைக்களை கொண்டுள்ளது. இந்த சேவை மையங்களை அதிகரித்து, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ஒவ்வொரு இந்திய குடிமகனின் தனித்துவ அடையாளமாக, அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு அடையாள அட்டையாக ஆதார் வழங்கப்பட்டது. ஆதார் சேவைகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மொபைல் வழியாக மற்றும் எஸ்எம்எஸ் வழியாக விண்ணப்பம், ஆதாரில் மாற்றங்கள் என்று எல்லாவற்றையும் மொபைல் அல்லது வெப் வழியாக மேற்கொள்ளும் அளவுக்கு வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கென்று, தனிப்பட்ட ஒரு போர்ட்டலாக UIDAI என்ற தளத்தை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.

    எல்லாவித சேவைகளையும் ஆன்லைனில் செய்து முடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆதார் சேவைகளை மேம்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்தியாவில் இணைய சேவை இல்லாத பல கிராமங்கள் மற்றும் சிற்றூர்கள் இருக்கின்றன.  அவர்களுக்கும் உதவும் வகையில் ஆதார் சேவையின் அடுத்தக்கட்டமாக வீடு வீடாக சென்று ஆதார் சேவைகள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. UIDAI, நாட்டின் 755 மாவட்டங்களிலும், வீடு வீடாக ஆதார் சேவையை வழங்க ஆதார் சேவா கேந்திராவைத் தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக UIDAI 48,000 மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    இணையம் இல்லாமல் இருந்தாலும், இந்திய அஞ்சல் சேவைகள் இல்லாத இடம் கிடையாது. எனவே, இந்திய அஞ்சல் சேவையைப் பயன்படுத்தி, இந்தியன் பேமெண்ட்ஸ் பேன்க் சேவைகளுடன் இணைத்து, நாட்டில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு கூட வீடு வீடாகச் சென்று மொபைல் எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஆதார் விவிரங்களில் மாறுதல் தேவைப்பட்டால் அதை செய்து தருவது, ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு சேர்க்கைக்கான வழிமுறைகளை மேற்கொண்டு ஆதார் வழங்குவது என்று அனைத்து சேவைகளையும் தபால் ஊழியர்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.



    தற்போது UIDAI 72 நகரங்களில் 88 ஆதார் சேவா கேந்திராவைக்களை கொண்டுள்ளது. இந்த சேவை மையங்களை அதிகரித்து, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    Also Read : SBI விடுத்த எச்சரிக்கை.. மொபைலுக்கு இப்படி மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருங்கள்!

    பெருவாரியான மக்களுக்கு ஆதார் சேவைகளை வழங்குவதன் மூலமாக, UIDAI மூலம் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் வழங்குவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்று முதல் கட்டமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இரண்டாம் கட்டத்தில், 1.5 லட்சம் தபால் அதிகாரிகளை இணைக்க இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Also Read : ரிட்டயர்மென்ட் காலத்துக்கு பிறகு ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா? இதை செய்யுங்கள்!

    தற்போது வரை, ஆதார் சேவையில் குழந்தைகளின் சேர்க்கைக்காக டேப்லெட் மற்றும் மொபைல் கிட்டைப் பயன்படுத்தி IPPB தபால்காரர்களை இயக்கியுள்ளதாகவும், இனி மொபைல் சாதனங்கள் அல்லாமல், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கணினியையும் பயன்படுத்தி தொலைதூரப் பகுதிகளில் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Aadhaar card

    அடுத்த செய்தி