Home /News /business /

UIDAI : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

UIDAI : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

ஆதார் அப்டேட்

ஆதார் அப்டேட்

UIDAI aadhaar update : 70 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் என தெரிவித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயோமெட்ரிக், பெயர், முகவரி போன்ற புள்ளி விபரங்களை அப்டேட் செய்துக் கொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது

    இந்திய குடிமக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது ஆதார் அடையாள அட்டை. வங்கி கணக்கு துவங்குவது முதல் அரசின் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் இன்றியமையாததாகிவிட்டது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் ப்ரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 12 இலக்க அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது. இந்நிலையில் தான் ஆதார் கார்டு வைத்திருக்கும் பயனர்கள் பயோமெட்ரிக், பெயர், முகவரி போன்ற புள்ளி விபரங்களை அப்டேட் செய்துக் கொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. அதே சமயம் 70 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் என தெரிவித்துள்ளது.

    ஆதாரை ஏன் புதுப்பிக்க வேண்டும்?

    இந்தியாவில் உள்ள அனைத்துப் பணிகளுக்கும் ஆதாரை கார்டு பயன்பட்டு வந்தாலும் சில நேரங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் இருந்தால் போதும் வங்கி தொடர்பான விஷயங்கள், எங்கெல்லாம் ஆதாரை இணைத்துள்ளோமோ அனைத்து விபரங்களையும் நாம் பெறமுடியும். இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை வந்த பிறகு அரசு நலத்திட்டங்கள், பான் கார்டு போன்றவற்றில் உள்ள போலி பயனர்களுக்குக் கண்டறிப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!

    இந்தியா முழுவதும் உள்ள மக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் ஆதாரைப் பெற வேண்டும் என்பதற்காக சுமார் 50 ஆயிரம் கார்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதோடு நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் அலுவலகங்கள், சில வங்கிகள் என அனைத்திலும் ஆதார் கார்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவீத மக்கள் ஆதார் கார்டை பெற்றுள்ள நிலையில், மேகலாயா, நாகலாந்து மற்றும் லடாக் பகுதியில் குறிப்பிட்ட சில சதவீதத்தினருக்கு மட்டுமே இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கிரெடிட் கார்டு வாங்க ஆசைப்படுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க!

    குழந்தைகள் ஆதார்..

    5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் கை ரேகை விவரங்களுடன் இருக்கும் பால் ஆதார் வழங்கப்படுகிறது. பின்னர் 5 வயது முதல் 15 வயது வரையில் ஒரு முறையும், 15 வயதிற்குப் பிறகு ஒரு முறையும் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க UIDAI அனுமதி அளித்துள்ளது. குழந்தைகளைப் பொறுத்தவரை இரண்டு முறை இலவசமாக ஆதாரில் பயோமெட்ரிக் விபரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ள வேண்டும் என்றால் ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆதார் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது என்றுள்ள சூழலில் நிச்சயம் அனைவரும் ஆதார் அடையாள அட்டையை புதுப்பிக்க மற்றும் அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhaar card, Aadhar

    அடுத்த செய்தி