சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் CEO பவிஷ் அகர்வால் அமெரிக்காவில் உபர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது உபர் (Uber Technologies Inc) மற்றும் அதன் போட்டியாளரான ஓலா ஆகியவற்றின் ரைட்-ஹெய்லிங் நிறுவனங்கள் இணைப்பிற்கான ஊடக அறிக்கையை வெள்ளிக்கிழமையன்று அகர்வால் மறுத்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Ola தலைமை நிர்வாகியான பவிஷ் அகர்வால் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உபர் உயர் அதிகாரிகளைச் சந்தித்ததாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கை தவறானது என்றும், நாங்கள் ஓலாவுடன் இணைப்பு பேச்சுவார்த்தையில் இல்லை என்றும் உபெர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஓலா CEO பவிஷ் அகர்வால் ட்விட்டரில், 'ஓலா, உபெர் இணைப்பு குறித்த இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும், எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தற்போது நாங்கள் நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் இந்த நிறுவனம் லாபகரமாகச் செயல்பட்டு வருவதாகவும், நன்றாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமாக நாங்கள் இருக்கிறோம் என்றும் கூறினார்.
Also Read:Bank Holidays | ஆகஸ்ட் மாதத்தில் இந்த 18 நாட்கள் வங்கிகள் இயங்காது
வேறு சில நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் வணிகத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என விரும்பினால், நாங்கள் அவர்கள் விருப்பத்தை வரவேற்போம் ,ஆனால் ஒருபோதும் நாங்கள் அவர்களுடன் இணைய விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் முன்னணியில் தீவிர போட்டி நிறைந்த இந்தியச் சந்தையில் இயங்கி வரும் நிறுவனங்களாகும். மேலும், இந்த நிறுவனங்கள் இதில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தள்ளுபடிகள் அளித்து வருவதாகவும் அதற்கான முயற்சியில் பில்லியன்களை செலவிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஜனவரி மாதம் 2020 ல் உபர் தனது உள்ளூர் உணவு விநியோக வணிகமான உபர் ஈட்ஸ் (Uber Eats) ஐ சோமாட்டோ லிமிடெட் நிறுவனத்திற்கு விற்றது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் ஓலாவும் தனது மளிகை விநியோக வணிகத்தை நிறுத்தியது. மேலும் அதன் மின்சார வாகன முயற்சியான Ola Electric Mobility காக குறைவான பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இப்படியாகப் பல அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது வெளியான இந்த செய்தி பொய் எனத் தெரியவருகிறது. ஓலா மற்றும் உபர் இந்த இரண்டு நிறுவனமுமே இந்தியாவில் அதிக அளவில் இயங்கிவரும் முன்னணி நிறுவனமாகவும்,போட்டிப் போட்டுச் செயல்பட்டு வரும் நிறுவனங்களாகவும் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.