சாஃப்ட்வேர் கோளாறு: அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடித்த வங்கி!

வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைத் தளங்கில் பதிவிட்டதை அடுத்து வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Web Desk | news18
Updated: January 8, 2019, 6:51 PM IST
சாஃப்ட்வேர் கோளாறு: அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடித்த வங்கி!
வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைத் தளங்கில் பதிவிட்டதை அடுத்து வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Web Desk | news18
Updated: January 8, 2019, 6:51 PM IST
ஐக்கிய அமீரகத்தின் மிகப் பெரிய ஃபர்ஸ்ட் அபுதாபி பாங்க் வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து திடீரென 175 திராஹாம் இந்திய மதிப்பில் 3,300 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைத்தளங்கில் பதிவிட்டதை அடுத்து வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

“வங்கி மென்பொருளில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் தவறுதலாக இந்த 175 திராஹாம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரத்தியேக குழு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் வங்கி கணக்குகளுக்குப் பணம் திருப்பி அளிக்கப்படும்” என்று வாடிக்கையாளர்களின் பேஸ்புக் பதிவுக்கு ஃபர்ஸ்ட் அபுதாபி பாங்க் பதில் அளித்துள்ளது.

இந்த விவகாரம் சமுக வலைத்தளங்களில் பரவ வங்கி உடனடியாக வாடிக்கையாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

2017-ம் ஆண்டு அபு தாபியின் டாப் வங்கிகளை இணைத்து ஃபர்ஸ்ட் அபுதாபி பாங்க் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் 10% இட ஒதுக்கீடு ?
First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...