• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தொடர் வைப்பு நிதிக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள்!

தொடர் வைப்பு நிதிக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள்!


வங்கிகள் கொடுக்கும் திட்டங்கள்

வங்கிகள் கொடுக்கும் திட்டங்கள்

Recurring Deposit : முதலீட்டுக்கு முழு உத்தரவாதம். பணத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீங்கள் தேர்வு செய்யும் வங்கியில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வட்டி விகிதம் மாறாமல் இருந்தாலும், பணம் இழக்கும் அபாயம் இல்லை.

  • Share this:
    ரெக்கரிங் டெபாசிட் எனப்படுவது தொடர் வைப்பு நிதியாகும். அதாவது, ஒரு தொகையை நீண்ட கால சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது. நிலையாக ஒரு தொகையையும் முதலீடு செய்யலாம், முடியாதவர்கள் தொடர் வைப்பு நிதி திட்டத்தை தேர்ந்தெடுத்து மாதாமாதமும் சிறு தொகையை சேமிக்கலாம்.

    இதற்கு கொடுக்கப்படும் வட்டி விகிதம், நீங்கள் தேர்வு செய்யும் காலத்தை பொறுத்து மாறுபடும். மூத்த குடிமக்களுக்கு அதிகமான வட்டியும், மற்றவர்களுக்கு அவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான வட்டியும் கொடுக்கப்படுகிறது.

    சில சிறப்புத் திட்டங்களுக்கு கூடுதலான வட்டியும் கொடுக்கப்படுகிறது. பொதுவாக, 4% முதல் 6.5% வட்டியானது, ஒரு வருடம் முதல் 5 அல்லது அதற்கு மேற்பட்ட காலம் செய்யப்படும் சேமிப்புகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் பொதுமக்களுக்கானது. மூத்த குடிமக்களுக்கு ஓப்பீட்டளவில் சற்று கூடுதலாக இருக்கும்.

    தொடர் வைப்பு நிதிக்கு (RD) -க்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் :
























































































    வங்கிகள் பொதுமக்கள் (p.a.%) மூத்தகுடிமக்கள்
    ஹெச்.டி.எப்.சி 4.40% - 5.50% 4.90% - 6.25%
    ஐ.சி.ஐ.சி.ஐ 3.50% - 5.50% 4.00% - 6.30%
    எஸ்.பி.ஐ 4.40% - 5.40% 4.90% - 6.20%
    அலகாபாத் வங்கி 6.25% - 6.45% 6.25% - 6.45%
    இந்தியன் வங்கி 6.25% - 6.30% 6.75% - 6.80%
    ஆக்சிஸ் வங்கி 4.40% - 5.75% 4.65% - 6.50%
    பாங்க் ஆஃப் பரோடா 4.30% - 5.10% 4.80% - 5.60%
    பேங்க் ஆஃப் இந்தியா 4.35% - 5.05% 4.85% - 5.55%
    கனரா வங்கி 4.40% - 5.25% 4.90% - 5.75%
    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 4.25% - 5.00% NA
    சிட்டி யூனியன் வங்கி 3.75% - 5.00% 3.75% - 5.00%
    இந்தியன் ஓவர்சீஸ் 4.90% - 5.20% 5.40% - 5.7%
    இண்டஸ்இண்ட் 4.60% - 5.560% 5.10% - 6.00%
    கரூர் வைஸ்யா 4.00% - 5.75% NA
    கோடக் மஹிந்திரா 4.30% - 5.25% 4.80% - 5.75%
    தமிழ்நாடு மெர்கன்டைல் 5.00% - 5.25% 5.00% - 5.75% 5.00% - 5.75%

    ரெக்கரிங் டெபாசிட்(RD) வட்டி விகிதங்களின் வகைகள் :

    வழக்கமான சேமிப்புத் திட்டம் (Regular Savings Scheme) :

    18 வயதுக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களாக இருப்பவர்கள் தொடர் வைப்பு நிதி வங்கிக் கணக்கை தொடங்க முடியும். 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நிலையான தொகையை டெபாசிட் செய்யவதற்கான கால அளவை தேர்வு செய்து கொள்ள முடியும். இதற்கு வழங்கப்படும் வட்டியை எளிய அல்லது கூட்டு வட்டி முறையில் கணக்கிடலாம். முதிர்வு காலத்தை எட்டியவுடன் மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். இதில் இருக்கும் சில திட்டங்கள் மீண்டும் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்கி மாதம் 10 ரூபாய் கூட சேமிக்கலாம். தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 4 முதல் 6.5 விழுக்காடு வரை கிடைக்கும்.

    ஜூனியர் ஆர்டி திட்டங்கள் (Junior RD Schemes ) :

    இது குழந்தைகளுக்கான ரெக்கரிங் டெபாசிட் திட்டம். குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அவர்களின் எதிர்காலம், கல்வி உள்ளிட்ட பிற தேவைகளுக்காக சேமிப்பதற்கு தொடர் வைப்புத்தொகை கணக்கை தொடங்கலாம். மாணவர்களாக இருப்பவர்களும் இந்த வைப்புத் தொகை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இளம் வயதிலேயே நிதியின் முக்கியத்துவத்தை அறிந்து, சேமிக்க கற்றுக்கொள்பவர்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.

    மூத்த குடிமக்கள் RD திட்டங்கள் (Senior Citizens RD Schemes) :

    மூத்த குடிமக்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளுக்கு வங்கிகள் கூடுதல் வட்டி விகிதங்களை கொடுக்கின்றன. நடைமுறையில் இருக்கும் வட்டியைவிட கூடுதலாக 0.50 விழுக்காடு வட்டி சேர்த்து கொடுக்கப்படும். அந்தவகையில் அவர்கள் சேமிக்கும் தொகைக்கு 4 முதல் 7.25 விழுக்காடு வரை வட்டி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முதுமை காலத்தில் அவர்களுக்கு இந்த சேமிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

    சிறப்பு RD திட்டங்கள் (Special RD Schemes) :

    மக்களின் தேவை மற்றும் இலக்குகளுக்காக உருவாக்கப்பட்டவை இந்த சிறப்புத் திட்டங்கள். இவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு பொதுவாக கூடுதல் வட்டி கிடைக்கும். வங்கிகளுக்கு வங்கி சிறப்புத் திட்டங்கள் மாறும். காப்பீடு உண்டு. சில திட்டங்களில் பகுதியளவு பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். மொத்த தொகைகளுக்கு கூடுதலான சில சிறப்பு வட்டிகளும் கொடுக்கப்படும்.

    ரெக்கரிங் டெபாசிட் முக்கியத்துவம் :

    1. தொடர் வைப்பு நிதியை தேர்ந்தெடுக்கும்போது முதலீடு செய்வது மற்றும் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும்.
    2. குறைந்தபட்சம் ரூ.500 -ல் இருந்து முதலீட்டை தொடங்கலாம்
    3. டெபாசிட் செய்யும் தொகையை படிப்படியாக அதிகரிக்கலாம்.
    4. 10 ஆண்டுகள் வரை ஆர்.டி அக்கவுண்டை வைத்திருக்கலாம்
    5. சில வங்கிகள் முன்கூட்டியே ஆர்.டி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன.
    6. நிலையான வைப்புத்தொகைக்கு இணையாக, வட்டி விகிதம் தொடர் வைப்பு நிதிக்கும் வழங்கப்படுகிறது.
    7. வங்கியில் இருந்து தானாகவே ஆர்.டிக்கு பணம் எடுத்துக்கொள்ளும் அறிவுறுத்தலையும் நீங்கள் கொடுக்க முடியும்.

    தொடர் வைப்பு வட்டி விகிதங்களை பாதிக்கக்கூடிய காரணிகள்:

    நீங்கள் வைத்திருக்கும் கணக்குக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடலாம். ஆர்.டியை நிர்ணயிப்பதில் வைப்புத் தொகையின் காலம் மிக முக்கியமான ஒன்று. சில வங்கிகள் நடுத்தர காலம் கொண்ட சேமிப்புக்கு அதிக வட்டியை கொடுக்கின்றன. சில வங்கிகள் ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சேமிக்கும் தொகைக்கு ஒரே மாதிரியான வட்டியை கொடுப்பார்கள். மூத்த குடிமக்களுக்குக்கு வங்கிகள் அதிக வட்டியை கொடுக்கின்றன. குழந்தைகளுக்கு சில சலுகைகள் கிடைப்பதால், வங்கியின் நிபந்தனைகளைப் பொறுத்து கூடுதல் வட்டி சம்பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

    முன்னணி வங்கிகள் 7 விழுக்காடு வட்டியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 8 விழுக்காடு வட்டியும் ஆண்டுக்கு வழங்கி வருகின்றன.

    தொடர் வைப்பு வட்டி விகிதங்களின் நன்மைகள் :

    முதலீட்டுக்கு முழு உத்தரவாதம். பணத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீங்கள் தேர்வு செய்யும் வங்கியில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வட்டி விகிதம் மாறாமல் இருந்தாலும், பணம் இழக்கும் அபாயம் இல்லை. முதல்முறையாக செலுத்தும் வைப்புத் தொகையில் இருந்து உங்களுக்கான வட்டி கிடைக்கும். பெரும்பாலான வங்கிகள் ஆன்லைன் மூலமாகவே அனைத்து சேவைகளையும் வழங்குகின்றன.

    அதனால், அனைத்து வங்கிகளில் கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள், திட்டங்களை தெரிந்து கொண்டு, அவற்றில் உங்களுக்கு ஏற்றத்தை தேர்வு செய்து முதலீடு செய்ய முடியும். மேலும், தொடர் வைப்பு நிதிக்கு தேவையான பொருத்தமான டெபாசிட் தொகையையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். உங்களுக்கு லோன் ஆஃபர்களும் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: