• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்சூரன்ஸ் இல்லையா? ஆனந்த் நிலைதான் உங்களுக்கும்?

இன்சூரன்ஸ் இல்லையா? ஆனந்த் நிலைதான் உங்களுக்கும்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குறிப்பு: இந்த கட்டுரை, படிப்பவர்களை பயப்பட வைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. இந்த இன்சூரன்ஸ் திட்டங்களை எல்லாம் வாங்கி இருந்தால் பயமின்றி வாழலாம் என்பதற்காக மட்டுமே.

  • News18
  • Last Updated :
  • Share this:
வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த உலகம் அதிகம் ஆபத்துடையது. பணத்தைச் சம்பாதிக்க வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் நாம், நமது சுகாதாரம், இழப்புகள், மதிப்பு வாய்ந்த பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் செலவுகளைச் செய்து கடனில் சிக்கிக் கொள்கிறோம்.

எனவே இப்படிப்பட்ட ஆபத்தான உலகில் ஆனந்துக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து நாம் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. அது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஹாய் மனோஜ் எப்படி இருக்கீங்க? நல்ல இருக்கிறேன் ஆனந்த்? நீங்க எப்படி இருக்கீங்க? ஏதோ இருக்கிறேன் மனோஜ். என்ன ஆனந்த் உங்கள் பதில்ல ஏதோ விரக்தி தெரியுதே? ஆமாம் மனோஜ், போன வாரம் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனை சென்றோம் அட்மிட் ஆகனும், ஒரு வாரம் சிகிச்சைனு சொல்லிட்டாங்க. கடைசில பில் 40,000 ரூபாய். மொத்த சம்பளமும் அதுக்கே செலவாகிடிச்சு.

என்ன, ஆனந்த் நீங்க ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கவில்லையா? ஹெல்த் இன்சூரன்ஸா? எதற்கு அதை வாங்கனும்? உங்கள் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 10,000 ரூபாய் கொடுத்து 2 லட்சம் மதிப்புடைய ஒரு குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பெற்று இருந்தால், 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது மொத்தச் செலவையும் காப்பீட்டு நிறுவனம் செலுத்தியிருக்கும். அப்படியா? இது எனக்குத் தெரியாமல் போச்சே மனோஜ்.

சரி, ஆனந்த் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் பற்றித் தெரியுமா உங்களுக்கு? இல்லை மனோஜ். போன வருசம் எனக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தார்கள் தெரியுமில்லையா உங்களுக்கு? ஆமாம், மனோஜ். ஏன் மீண்டும் ஏதாவது சிக்கலா? இல்லை ஆனந்த். அப்போது நான் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் பெற்று இருந்தேன்.

அப்போது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இதைப் பற்றி அறிவித்த உடன் சிகிச்சைக்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு எனக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். எனது மருத்துவமனை கட்டணம், மற்றும் தற்போது பெற்று வரும் தொடர் சிகிச்சை என அனைத்திற்கும் அதிலிருந்தே செலுத்திவிடுகிறேன்.

இது எப்படிச் சாத்தியம் மனோஜ். ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற ஒரு திட்டம் தான் இதுவும். ஆனால், இது வருடா வருடம் செலுத்தாமல் 30 வருடங்கள் வரை, ஆண்டு அல்லது மாத பிரீமியமாகச் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தி வரும்போது இது போன்ற பெரிய அறுவை சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து மொத்த தொகையும் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் மூலமாகப் பெற முடியும்.

இதைத் தற்போது சில லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் உடன் இணைத்தும் அளிக்கின்றன. டெர்ம் இன்சூரன்ஸா! அது எதற்கு? நான் வாங்கியுள்ள வீட்டிற்குக் கடன் மட்டும் 60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது.

ஒருவேளை இந்தக் கடனை அடைக்கும் முன்பு நான் இறக்க நேர்ந்தால் அந்தக் கடனை யார் அடைப்பார்கள்? பிள்ளைகள் படிப்பார்களா, எனது மனைவிக்கும் அது நிதி சிக்கலை ஏற்படுத்தும் அல்லவா? இப்படித் தற்செயலாக ஒரு இழப்பு ஏற்படும்போது உதவட்டும் என எனது பெயரில் ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியுள்ளேன்.

அட என்ன மனோஜ், நல்ல வார்த்தையா பேசாமா? இல்லை, இந்தப் பாலிசி எடுத்துள்ளதால் ஒருவேலை நான் இல்லை என்றாலும் 1 கோடி ரூபாய் எனது மனைவிக்குக் கிடைக்கும். அதை வைத்துக் கடனை அடைப்பது மட்டும் இல்லாமல் எனது பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியும் இல்லையா?

ஹூம், இதுபோல இன்னும் வேறு ஏதாவது உள்ளதா மனோஜ். இருக்கிறது, சொல்கிறேன் கேளுங்கள். சைபர் ரிஸ்க் இன்சூரன்ஸ் என ஒன்றுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் இணையதள வங்கிச் சேவை, டிஜிட்டல் வாலெட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.

ஒருவேளை செல்போன் தொலைந்து போனால். அதில் உள்ள விவரங்களை வைத்துப் போனை திருடியவர்கள் நமது பணத்தைத் திருடக்கூடும். இல்லை எனில் ஹேக்கிங் மூலமாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போக வாய்ப்புகள் உள்ளன. அப்போது சைபர் ரிஸ்க் இன்சூரன்ஸ் இருக்கும்போது வங்கிக் கணக்கில் உள்ள பணத்திற்கு அவர்கள் பொறுப்பேற்பார்கள்.

இதுபோன்ற மோசடிகள் நடைபெறும் போது அதனை விசாரித்து உண்மை அறிந்துகொண்டு நாம் இழந்த பணத்தை ஒப்படைப்பார்கள். இப்படி ஒன்று உள்ளதா? நான் கூட என் போனில் பேடிஎம் எல்லாம் பயன்படுத்துகிறேன். அதற்கு இது உதவும் இல்லையா? கண்டிப்பா ஆனந்த்.

சரி, உங்களுக்குத் தனிநபர் விபத்துக் காப்பீடு பற்றித் தெரியுமா? ஆமாம் ஆனந்த், வெறும் 750 ரூபாய் கொடுத்து இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது ஏற்படும் விபத்துக்களில் உயிர் இழப்பு அல்லது கை கால் இழப்பு போன்றவை ஏற்படும் போது 15 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும்.

இது எல்லாம் சரி மனோஜ். 2015 வெள்ளம், அப்பறம் இப்ப வந்த கஜா புயல் காலங்களில் வீடு, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் இழந்து தவிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்று ஒரு இன்சூரன்ஸ் இருந்தால் நல்லா இருக்கும் இல்லையா?

ஏன் இல்லை. அது எல்லாம் ஏற்கனவே இருக்கு ஆனந்த். மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. அவ்வளவு தான். ஜெனரல் இன்சூரன்ஸில் வீடு, வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என அனைத்திற்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. அதை வாங்கும் போது வீட்டின் கட்டடத்திற்கு ஏற்படும் பாதிப்பு முதல், வீட்டில் இருந்த டிவி, குளிர்சாதனப் பெட்டி, தங்கம் என அனைத்திற்கும் இழப்பீட்டைப் பெற முடியும். வெள்ளம் வந்துவிட்டதே என அரசை நம்பி கையேந்தியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

குறிப்பு: இந்தக் கட்டுரை, படிப்பவர்களைப் பயப்பட வைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. மேலே கூறிய இன்சூரன்ஸ் திட்டங்களை எல்லாம் வாங்கி இருந்தால் பயமின்றி வாழலாம் என்பதற்காக மட்டுமே.

மேலும் பார்க்க: குஷ்பு எனும் அரசியல்வாதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: