• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் இத்தனை வகைகள் இருக்கா? இது தெரியாம போச்சே

சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் இத்தனை வகைகள் இருக்கா? இது தெரியாம போச்சே

மாதிரி படம்

மாதிரி படம்

, நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு உதவும் வகையில் கரண்ட் அக்கவுண்ட்கள் உதவுகின்றன.

  • Share this:
    பொதுவாக வங்கிகளில் சேவிங்ஸ் அக்கவுண்ட் (சேமிப்பு கணக்கு) மற்றும் கரண்ட் அக்கவுண்ட் (நடப்பு கணக்கு) ஆகியவை நடைமுறையில் இருக்கின்றன. இந்த 2 அக்கவுண்ட்களும் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு நிதி தேவைகளை நிவர்த்தி செய்து, சிறப்பான பண மேலாண்மைக்கு உதவுகின்றன. சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட்ஸ்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டு வெவ்வேறு அம்சங்களை கொண்டிருக்கின்றன. சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் சேமிக்க விரும்பும் நபர்களுக்கு உதவும் அதே நேரத்தில், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு உதவும் வகையில் கரண்ட் அக்கவுண்ட்கள் உதவுகின்றன.

    சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரம் வழக்கமான அல்லது அடிக்கடி நிகழும் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் கரண்ட் அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் வாங்கு ஊழியர்கள் அல்லது நிலையான மற்றும் வழக்கமான வருமானத்தை கொண்ட எந்த ஒரு நபருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்ட் மிக சிறந்த தேர்வாக உள்ளது. தவிர குறுகிய கால நிதி தேவைகள் மற்றும் இலக்குகளை கொண்டவர்களுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் சிறப்பானது. சுருக்கமாக சொன்னால் மாத ஊதியம் பெறுபவர்கள் அல்லது வழக்கமான மாத வருமானம் உள்ளவர்களுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் நல்ல பயனளிக்கும். மேலும் சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் இருப்பு தொகை மற்றும் வங்கியை பொறுத்து ஆண்டுக்கு 2.70% முதல் 5.25% வரையிலான வட்டி விகிதங்களை பெறுகின்றன.  

     

    சேவிங்ஸ் அக்கவுண்ட்டின் வகைகள்..

     

    ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட்: இந்த சேவிங்ஸ் அக்கவுண்ட் அடிப்படை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓபன் செய்யது தரப்படுகின்றன. பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் எவருக்கும் வழக்கமான சேமிப்புக் கணக்கு இருக்கலாம். இந்த சேவிங்ஸ் அக்கவுண்ட் பணத்தை பத்திரமாக சேர்த்து வைக்க பயன்படும் பாதுகாப்பான வீட்டிற்கு சமமானது.

    சம்பள அடிப்படையிலான சேவிங்ஸ் அக்கவுண்ட்: இந்த சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் நிறுவனங்களின் கோரிக்கையின் பேரில் வங்கிகளால் ஒருவருக்கு ஓபன் செய்து தரப்படுகின்றன. பெரும்பாலான சேலரி-பேஸ்டு சேவிங்ஸ் அக்கவுண்ட்டிற்கு மினிமம் பேலன்ஸ் தேவை என்ற நிலை இருக்காது. தொடர்ந்து 3 மாதங்கள் இந்த வகை அக்கவுண்ட்டில் சம்பளம் வரவு வைக்கப்படாவிட்டால், அந்த அக்கவுண்ட் ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட்டாக மாற்றப்பட்டு விடும்.

    சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்: ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் போலவே இந்த அக்கவுண்ட் செயல்பட்டாலும், இது மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி சலுகைகளை வழங்குகிறது. பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை நாடும் முதியவர்களை மனதில் வைத்து, வங்கிகள் சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஆப்ஷனை வழங்குகின்றன. இந்தசேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ் சேமிப்பிற்கான 0.50% கூடுதல் வட்டி விகிதம், பேசிக் ஹெல்த் மற்றும் ஆக்சிடென்டல் இன்ஷுரன்ஸ் போன்ற கூடுதல் நன்மைகளுடன் வருகின்றன.

    மைனர்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் (சிறார் சேமிப்பு கணக்கு): வங்கி வசதிகள் மற்றும் சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க இந்த வகை அக்கவுண்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை. ஒரு குழந்தை அதன் 10 வயதை நிறைவு செய்யும் வரை சட்டப்பூர்வ பாதுகாவலரின் மேற்பார்வையின் கீழ் இது போன்ற அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். 10 வயதை தாண்டிய பிறகு குறிப்பிட்ட குழந்தை சொந்தமாக அந்தண் அக்கவுண்ட்டை ஆபரேட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. குழந்தை 18 வயதை அடைந்து மேஜரான பின்னர் அதன் மைனர்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்டானது, ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட்டாக மாற்றப்படும்.

    ஜீரோ பேலன்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்: ஜீரோ பேலன்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்டானது சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரண்ட் அக்கவுண்டின் அம்சங்களை ஒன்றிணைக்கிறது. ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களிடையே பிரபலமான சேவிங்ஸ் அக்கவுண்ட்டாக இருக்கிறது இந்த ஜீரோ பேலன்ஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட். மாத சம்பளம், ஊக்க தொகைகள், போனஸ்கள் மற்றும் பிற வகையான நிதி வெகுமதிகளை டெபாசிட் செய்ய ஒரு ஊழியரின் நிறுவனத்தால் இந்த அக்கவுண்ட் ஓபன் செய்யப்படுகிறது. அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை எடுப்பதற்கு வரம்புகள் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகைக்குக் குறைவாக இருப்பு இருந்தால் அபராதம் ஏதும் விதிக்கப்படாது.  பொதுவாக இந்த அக்கவுண்ட்டின் மூலம் டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் விவரங்கள் அடங்கிய கிட் உடனடியாக தரப்படுகிறது.

    பெண்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட் (Women’s Savings Account): இந்த வகை சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கின்றன. இதில் சில பர்ச்சேஸ் மீதான தள்ளுபடிகள், கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் டிமேட் கணக்கு கட்டணங்களில் தள்ளுபடி உள்ளிட்ட நன்மைகள் அடங்கும்.

    சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்ய தேவையான தகுதிகள்..

    சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்ய தேவையான தகுதிகள் வங்கிகளை பொறுத்து மாறுபடும் என்றாலும் பொதுவான அளவுகோல்கள் பின்வருமாறு: இந்திய குடியுரிமை பெற்றவர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சிறார் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை தவிர வேறு வகை சேவிங்ஸ் அக்கவுண்ட்டை ஓபன் செய்ய 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

    சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்..

    வயது மற்றும் அடையாளச் சாறு - ஓட்டர் ஐடி,  பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசன்ஸ்

    போட்டோ - குறைந்தது 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்

    முகவரி சான்று - டிரைவிங் லைசன்ஸ், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், பயன்பாட்டு பில்கள் (உதாரணம் : சிலிண்டர் ரசீது)

    மூத்த குடிமக்கள் - வயதுக்கான ஆதாரத்துடன் கூடிய ஆவணம் (சமூக நலத் துறையால் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் அட்டை)

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

    * சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்பது உபரி நிதிகளைச் சேமிக்க பாதுகாப்பான வழி. இதில் சேமிக்கப்படும் தொகைக்கு உரிய வட்டி கிடைக்கிறது.

    * வங்கிகள் மற்றும் தேர்வு செய்யும் டைப்பை பொறுத்து சேவிங்ஸ் அக்கவுண்ட்டிற்கான வட்டி விகிதங்கள் 3.5% முதல் 7% வரை இருக்கலாம்.

    * இன்டர்நெட் பேங்க் மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளை எளிதாக அணுகலாம்.

    * குறைந்தபட்ச காலாண்டு இருப்பை பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வாடகை வசதிகளில் தள்ளுபடியை ஒரு சில வங்கிகள் வழங்குகின்றன.

    * பெரும்பாலான வங்கிகள் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு தனிப்பட்ட விபத்துக்கள் மற்றும் இறப்புகள் உட்பட பல்வேறு இன்ஷுரன்ஸ் திட்டங்களை வழங்குகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: