Home /News /business /

MobiKwik-ல் வெறும் 2 நிமிடங்களில் டூ வீலர் இன்ஷுரன்ஸ்.. க்ளைம் போனஸ் இல்லை, கூடுதல் அம்சங்கள் - முழு விவரம்

MobiKwik-ல் வெறும் 2 நிமிடங்களில் டூ வீலர் இன்ஷுரன்ஸ்.. க்ளைம் போனஸ் இல்லை, கூடுதல் அம்சங்கள் - முழு விவரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Mobikwik Two-Wheeler Insurance | இன்ஷுரன்ஸ் பேக்கேஜ்களில் ஜீரோ டிப்ரிசியேஷன் , தனிப்பட்ட விபத்து மற்றும் 24X7 ரோட் அசிஸ்டன்ஸ் போன்ற add-ons-களும் அடங்கும்

    மொபைல் வாலட் மற்றும் பேமென்ட் சர்விஸ்களை வழங்கும் ஃபின்டெக் நிறுவனமான மொபிக்விக் (MobiKwik), அதன் பிளாட்ஃபார்மில் டூ வீலர் இன்ஷூரன்ஸை அறிமுகப்படுத்தி உள்ளது. டூ வீலர் இன்ஷூரன்ஸ் மார்க்கெட் ஷேரை அதிகரிக்க செய்யும் இந்த முயற்சிக்காக சோழமண்டலம் MS ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட், SBI ஜெனரல் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் மொபிக்விக் கை கோர்த்துள்ளது.

    எனவே இனி வாடிக்கையாளர்கள் விரைவான, எளிதான சில எளிய படிகளை பின்பற்றி, Mobikwik ஆப் மூலம் தங்கள் டூ வீலர்களை இன்ஷூரன்ஸ் செய்ய முடியும். ஒரு வாடிக்கையாளர் தனது RC-ஐ அணுகாமல் வாகன எண்ணை என்டர் செய்வதன் மூலம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்ள முடியும் என்று மொபிக்விக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. MobiKwik-ன் பிளாட்ஃபார்மில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் மூலம் தேர்ட் பார்ட்டி மற்றும் விரிவான டூ வீலர் இன்ஷூரன்ஸ் திட்டங்களை வாடிகையாளர்கள் பெறலாம்.

    இன்ஷுரன்ஸ் பேக்கேஜ்களில் ஜீரோ டிப்ரிசியேஷன் , தனிப்பட்ட விபத்து மற்றும் 24X7 ரோட் அசிஸ்டன்ஸ் போன்ற add-ons-களும் அடங்கும். இந்த இணைப்பு குறித்து பேசிய த MobiKwik இணை நிறுவனர் ப்ரீத் சிங், இந்த பாட்னர்ஷிப் இந்தியாவின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரே இடமாக மாறுவதற்கான எங்கள் பார்வையை வலுப்படுத்துகிறது என்றார். சோழா எம்எஸ் ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவன MD சூர்யநாராயணன் கூறுகையில், பிராண்டின் மிகப்பெரிய ஆர்கானிக் டிஜிட்டல் யூஸர் பிளாட்ஃபார்மை பூர்த்தி செய்வதே எங்கள் முயற்சியாக இருக்கும் என்றார்.

    Also Read : பெண்களுக்கான எல்.ஐ.சி பாலிசி: ஒரு நாளைக்கு ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சத்தை பெறலாம்!

    இதனிடையே இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) தகவல்படி, 2018-19 நிதியாண்டில் சாலையில் சென்ற மொத்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 17.59 கோடியாக இருந்தது. அதே நேரம் அதே நிதியாண்டில் இரு சக்கர வாகனங்களுக்கான மொத்த பாலிசிகளின் எண்ணிக்கை 5.9 கோடியாக இருந்தது.

    எவ்வளவு செலவாகும்?

    டூவீலர் இன்ஷுரன்சில் பிரீமியம் என்பது வாகனத்தின் வகை, வாகனத்தின் பதிவு ஆண்டு, தயாரிப்பு மற்றும் மாடல், பதிவு செய்யப்பட்ட இடம், வாகன பாகங்கள், மாற்றங்கள் மற்றும் மைலேஜ் போன்றவற்றை பொறுத்தது. இந்த காரணிகள் பிரீமியம் தொகையை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

    உதாரணம்.. மாடல்: ஹோண்டா ஆக்டிவா , பதிவு செய்த ஆண்டு: 2020, பதிவு செய்த இடம்: டெல்லி மற்றும் NCB :0% உடன் பிரீமியம் ரூ 413 ஆகும்

    டூ வீலர் இன்ஷுரன்ஸ் பாலிசியின் கீழ் என்ன கவராகும்?

    விரிவான இரு சக்கரவாகன காப்பீடு (Comprehensive two-wheeler insurance) உங்களை நிதி ரீதியாகக் காப்பீடு செய்து, கொள்ளை, திருட்டு, கலவரங்கள் & வேலைநிறுத்தங்கள், தீ விபத்துகள், சாலை விபத்துகள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் போன்ற சேதங்களிலிருந்து இரு சக்கர வாகனத்தை பாதுகாக்கிறது மற்றும் தேர்ட் பார்ட்டி இழப்புகளும் கவராகும். தவிர ஜீரோ டிப்ரிசியேஷன் மற்றும் 24X7 சாலை உதவி போன்ற கூடுதல் நன்மைகளை பாலிசி உள்ளடக்கி உள்ளது.

    MobiKwik டூ வீலர் இன்ஷுரன்ஸ் பாலிசியின் கூடுதல் அம்சங்கள்..

    Mobikwik ஜீரோ பேப்பர் வொர்க்குடன் இன்ஸ்டன்ட் பாலிசியை வழங்குகிறது. தங்களின் இரு சக்கர வாகனத்தை 2 நிமிடங்களுக்குள் யூஸர்கள் இன்ஷுரன்ஸ் செய்து கொள்ளலாம் மற்றும் முந்தைய பாலிசியை எவ்வித ஆய்வும் இன்றி புதுப்பித்து கொள்ளலாம். தவிர யூஸர்கள் 50% வரை நோ-க்ளைம் போனஸ் ஆஃபர்களை பெறலாம்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Insurance

    அடுத்த செய்தி