• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 2 ரூபாய் இருக்கா பாஸ்.. 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. கண்டிஷன் இதுதான் விவரம் உள்ளே

2 ரூபாய் இருக்கா பாஸ்.. 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. கண்டிஷன் இதுதான் விவரம் உள்ளே

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வலைதளத்தின், கட்டணம் மற்றும் விற்பனை விதிமுறைகளின்படி நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம்.

  • Share this:
    பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கா.. அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. சாமானியரின் நிலையை சொல்லவா வேண்டும். சரி நாம விஷயத்துக்கு வருவோம். உங்களிடம் 2ரூபாய் இருந்தா இந்த கொரோனா காலத்தில் நீங்களும் லட்சாதிபதியாகலாம். கையில காசு கூடவே கொஞ்சம் அதிர்ஷடமும் இருந்தா நீங்களும் லட்சாதிபதிதான்.

    எப்படின்னு கேக்குறீங்களா.. 1994-ம் ஆண்டில் இந்திய அரசால் அச்சிடப்பட்ட பழைய இரண்டு ரூபாய் நாணயங்கள் உங்களிடம் இருக்கா. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இந்திய தேசியக்கொடி அச்சிடப்பட்டிருக்கும். இந்த நாணயமானது உங்களிடம் இருந்தால் நீங்கள் ரூ. 5 லட்சம் சம்பாதிக்கலாம்.

    Also Read: Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ அஞ்சலியா இது? மேக்கப் இல்லாத வீடியோ!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த அரிய நாணயங்களில் ஒன்று உங்களிடம் இருந்தால், Quickr தளத்தில் அதனை விற்க, முதலில் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். இதற்குப் பிறகு, உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். வலைத்தளம் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்து பதிவு செய்யும்.

    இதன்பின்னர் இந்த பழைய நாணயங்களை வாங்குபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்களுக்கு அதிர்ஷடம் அடித்தால் லட்சங்களுக்கு விற்கலாம். அந்த வலைதளத்தின், கட்டணம் மற்றும் விற்பனை விதிமுறைகளின்படி நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம். அதேபோல் சுதந்திரத்திற்கு முன்னர் அச்சிடப்பட்ட 1ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதில் விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டிருக்கும். 1918-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படத்துடன் கூடிய 1 ரூபய் நாணயத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பழைய நாணயங்களை விற்பனை தளங்களில் பதிவிட்டு விற்கும்போது, சில மோசடி நபர்கள் அழைப்பை மேற்கொண்டு ஏமாற்றுவதாக அறிகிறோம். எனவே, அது குறித்து விழிப்பாக இருக்கவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: